ஆசிரியர்களுக்கு பயிற்சி வரும், 9ம் தேதி துவக்கம்


பிளஸ் 1 புதிய பாடத்திட்டத்தில், ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதியை, பள்ளிக் கல்வித் துறை
வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இதில், பிளஸ் 1ல், புதிய பாடத்திட்டப்படி, பாடங்களை நடத்துவது குறித்து, ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி, வரும், 9ல் துவங்கி, 21ல் முடிகிறது. மாவட்ட அளவில், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வழியாக, பயிற்சி தரப்படுகிறது. பயிற்சிக்கான ஆசிரியர்கள், மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் கூறியுள்ளனர்