Title of the document
அங்கன்வாடி மையங்களில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு எழுப் பிய கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் கூறிய தாவது:
இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு வழங்கும் 14 வகையான இலவசப் பொருட் கள் குறித்த விழிப்புணர்வு துண் டுப் பிரசுரங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு 5,600 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங் கில வழி கல்விக்காகத்தான் தனியார் பள்ளிகளை பொதுமக்கள் நாடுகின்றனர்.
எனவே, சமூக நலத்துறையுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள 4 லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகளுக்கு ஆங் கில வழிக் கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post