தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டுகோள்

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு மதுரை மாவட்டத்திலிருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் என்.மாரிமுத்து விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கடந்த 2017 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பங்களை ஆசிரியர்கள் தாங்களே நேரடியாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் இணையதளம் வாயிலாக வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

விருதுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க ‌w‌w‌w.‌n​a‌t‌i‌o‌n​a‌l​a‌w​a‌r‌d‌t‌o‌t‌e​a​c‌h‌e‌r‌s.​c‌o‌m என்ற இணையதளத்தில் விவரங்களைப் பதிவு செய்யவேண்டும்.

ஓய்வு பெற்றவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கக் கூடாது.

கடந்த 2017 ஆம் ஆண்டில் குறைந்தது 4 மாதங்கள் பணியாற்றியிருக்கவேண்டும். அதாவது 2017 ஏப்ரல் வரை பணிபுரிந்திருப்பது அவசியம்.

அலுவலகங்களில் நிர்வாகப் பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கக்கூடாது.

மனிதவள மேம்பாட்டுத்துறையின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment