ஆனந்த், கார்ல்சனுடன் செஸ் விளையாட ஆசை: கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உற்சாகம்

விஸ்வநாதன் ஆனந்த், கார்ல்சனுடன் செஸ் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத் தால் மகிழ்ச்சி அடைவேன் என்று, செஸ் போட்டியில் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்ற சென்னை சிறுவன் பிரக்ஞானந்தா தெரிவித்தார்.

சென்னை பாடியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி நாகலட்சுமி. இவர்களது 12 வயது மகன் பிரக்ஞானந்தா.

வேலம்மாள் பள்ளியில் படிக்கும் இந்தச் சிறுவன், இத்தாலியில் நடந்த ஓபன் செஸ் போட்டியில் வெற்றி பெற்றார்.

முதல் இந்திய சிறுவன்
இதன்மூலம் உலக அளவில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 2-வது சிறுவன் எனும் பெருமையையும், செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் இந்தியச் சிறுவன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

உற்சாக வரவேற்பு

இந்நிலையில், இத்தாலியில் இருந்து நேற்று சென்னை வந்த பிரக்ஞானந்தாவுக்கு விமான நிலையத்தில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சக மாணவ, மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது சிறுவன் பிரக்ஞானந்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மிகுந்த மகிழ்ச்சி

உலக அளவில் இளம் வயதில் இரண்டாவது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பயிற்சியாளர், பெற்றோர் மற்றும் நண்பர்கள் எனக்கு உதவியாக இருந்தனர்.

சிறு வயதில் இருந்து செஸ் விளையாடுவதால், எனக்கு இந்த போட்டியில் விளையாடுவதில் பெரிய கஷ்டம் தெரிய வில்லை.

இனிவரும் போட்டிகளில் இன் னும் புள்ளிகளை அதிகரிக்க வேண்டும்.

விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் கார்ல்சனுடன் செஸ் விளையாட வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்.
இவ்வாறு பிரக்ஞானந்தா கூறினார்.

0 Comments:

Post a Comment