தொடக்க நிலை வகுப்புகளுக்கு சீருடை மாற்றம் : கரும்பச்சை கால்சட்டை, இளம்பச்சை மேல்சட்டை அறிமுகம்

தொடக்க நிலை வகுப்புகளுக்கு சீருடை மாற்றம் : கரும்பச்சை கால்சட்டை, இளம்பச்சை மேல்சட்டை அறிமுகம்

தமிழக அரசு பள்ளிகளில் தொடக்க வகுப்புகளில் சீருடைகள் நடப்பாண்டு முதல் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, கரும்பச்சை கால்சட்டை மற்றும் இளம்பச்சை மேல்சட்டையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிறமாற்றமானது மாணவர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் 1 முதல் 8ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.

மாணவர்களுக்கென பாடப்புத்தகம், நோட்டுகள், சீருடை, புத்தகப்பை உள்பட பல்வேறு உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

நடப்பாண்டு கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

சீருடையை பொறுத்தவரை 6 முதல் 10ம் வகுப்பு வரையும், மேல்நிலை வகுப்புகளுக்கும் புதிய நிறத்தில் சீருடை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தொடக்க நிலை வகுப்புகளுக்கான சீருடையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, கரும்பச்சை கால்சட்டையும் மற்றும் இளம்பச்சை மேல்சட்டையும் நடப்பாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும்போது, இவற்றை மாணவர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக பாடப்புத்தகம் மற்றும் புத்தக பைகளை பள்ளிக்கு அனுப்பும் போதே சீருடையையும் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீருடை மாற்றம், மாணவர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

0 Comments:

Post a Comment