Title of the document

ஜெயலலிதா உடல்நிலை மிக மோசம்: லண்டன் டாக்டர் அறிக்கை
மாற்றம் செய்த நாள்: டிச 05,2016

சென்னை: ‛ முதல்வர் ஜெயலலிதா நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது' என, லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை நான் தொடர்ந்து கவனித்து வந்தேன்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவருக்கு திடீர் கார்டியாக் அரெஸ்ட் பிரச்னை வந்து விட்டது. அவரது உடல் நிலை மிக மிக மோசமான நிலையில் உள்ளது.

எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து விட்டோம். அவரை காப்பாற்றும் அனைத்து முயற்சிகளையும், டாக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். உலகத்தரம் வாய்ந்த மருத்துவ உபகரணங்களை கொண்டு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நேரத்தில்,தமிழக மக்களுக்கு என் பிராத்தனைகளை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்குà®®் பகிà®°ுà®™்கள் - யாà®°ேனுà®®் à®’à®°ுவருக்காவது பயன்படுà®®்...

Post a Comment

Previous Post Next Post