நாட்டில் இன்னும் போதிய பணப்புழக்கம் இல்லாமல் மக்கள் அவதிபட்டு வருகின்றனர். இந்நிலையில், வங்கிகளுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதால், மக்கள் இன்னும் சிரமத்தை அனுபவிக்க நேரிடும்.
மத்திய அரசின் பண மதிப்பிழப்பு அறிவிப்பையடுத்து, மக்கள் தங்களிடம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்கு வங்கிகளில் காத்து கிடக்கின்றனர். மேலும், செலவுக்காக பணம் எடுப்பதற்கு ஏடிஎம்களில் கால் கடுக்க நிற்கின்றனர். மேலும், வங்கிகளில் போதிய பணம் விநியோகிக்கப்படாததால், வங்கிகளும் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருக்கின்றன. மேலும், ஒரு வாரத்திற்கு ஒரு நபர் வங்கியிலிருந்து குறைந்தபட்சமாக 24,000 வரை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பணத்தட்டுபாட்டால் அதையும் செயல்படுத்த முடியாமல் வங்கி ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வங்கிகளுக்கு வரும் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை தொடர்ந்து விடுமுறை வருகிறது. அதாவது சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை. திங்கட்கிழமை மிலாடி நபி வருவதால் தொடர்ந்து வங்கிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment