ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் பல புதிய சலுகை திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 5-ம் தேதி அதிவேக 4ஜி இணையதள சேவை மற்றும் இலவச வாய்ஸ் கால் சேவையை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தியது. அன்று முதல் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடுமையான போட்டியை சந்தித்து வருகிறது. இதனை எதிர்கொள்ளும் விதமாக ஏர்டெல் பல சிறப்பு டேட்டா திட்டங்களை அறிவித்திருந்தது. இருப்பினும் ஜியோவை வெல்ல முடியவில்லை.
இதனை முறியடிக்கும் விதமாக ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில் இரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இதன்படி, வாய்ஸ் கால் மற்றும் டேட்டா சிறப்பு விலையில் கிடைக்கின்றன. ரூ.145 மற்றும் ரூ.345 என நிர்ணயிக்கப்பட்ட இந்த புதிய திட்டங்கள், ஜி
ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.145 க்கு 300எம்பி 4ஜி டேட்டாவும், ரூ.345-க்கு 1ஜிபி டேட்டாவும், ரூ.145 க்கு அனைத்து ஏர்டெல் நம்பர்களுக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை இலவசம் மற்றும் ரூ.345-க்கு இந்தியா முழுக்க அனைத்து நம்பர்களுக்கும் இலவச உள்ளூர் மற்றும் வெளியூர் எண்களுக்கு இலவச அழைப்புகளை வழங்குகிறது.
அதுமட்டுமின்றி, இரு திட்டத்திற்கும் இண்டர்நெட் இணைப்பு வசதி கொண்ட பீச்சர்போன்களுக்கு 50எம்பி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
குறிப்பாக இந்த விலை டெல்லி வட்டாரத்திற்கு மட்டும் பொருந்தும் என்றும் மற்ற வட்டாரங்களின் விலையில் மாற்றங்கள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment