Title of the document

யூ டியுப் நிறுவனம் குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக யூ டியுப் கிட்ஸ் என்னும் வீடியோ ஆப்பை இந்தியாவில் அறிமுகம் செய்யதுள்ளது. குழந்தைகள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் மிக எளிதான முறையில் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை குழந்தைகளே எளிதாக பயன்படுத்தி கொள்ளலாம். இந்த வீடியோ ஆப் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனில் தறவிறக்கம் செய்து கொள்ளலாம். வீடியோ ஆப்பில் உள்ள சிறப்பம்சங்கள் என்னவென்றால் இதில் குழந்தைகளுக்கு ஏற்ற கார்ட்டூன் சேனல்களான ச்சு ச்சு டிவி, கிட்ஸ் டிவி, கேட் அண்ட் கீட், லிட்டில் கிருஷ்ணா போன்றவையும், பாடல்கள், ரைம்ஸ், கற்றல் தொடர்பான பல வீடியோக்கள் இதில் இடம் பெற்றுள்ளன. மேலும் குரல் வழி தேடுதல் வசதி, டைமர் செட் செய்யும் வசதி, சேப் சர்ச் வசதி போன்ற அம்சங்களுடன் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் வைத்துகொள்ள கடவு சொல் பொருத்தும் வசதியும் இந்த வீடியோ ஆப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post