Title of the document


மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகளுக்கான புத்தகம் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கல்வியோடு நல்லொழுக்கம் பள்ளி மாணவர்களுக்கு கல்வியுடன் நல்லொழுக்கத்தையும் கற்பிக்க வேண்டும் என்பதற்காக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.
அதன்படி அனைத்து வகுப்புகளிலும் ஆசிரியர்கள் நீதிபோதனை வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
6, 7, 8-ம் வகுப்புகளில் மாணவ-மாணவிகளுக்கு நீதிபோதனை வகுப்புகள் எடுக்க ஆசிரியர்களுக்கு தனியாக புத்தகம் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டு உள்ளது.

தற்போது 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான நீதிபோதனை புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.
மனிதநேயம், திறன்வளர்த்தல் அந்த புத்தகங்களில் பொதுஉடமை, மனதிடம், தேசிய உணர்வு, திறன் வளர்த்தல், சேவை மனப்பான்மை, உடல்நலம் பேணுதல், மனிதநேயம், சாலை விதிகளை மதித்தல், பொதுசொத்துகளை பாதுகாத்தல், கடமை உணர்வு, போதை இல்லா வாழ்வு, புகைபிடிப்பதால் புற்றுநோய் ஆபத்து, வெற்றி தோல்விகளை சமமாக பாவித்தல், பெற்றோரை மதித்தல், மதநல்லிணக்கம், சகிப்புதன்மை, பெண்ணின் பெருமை உள்பட பல்வேறு தலைப்புகளில் விளக்கத்துடன் கூறப்பட்டுள்ளன.

மேலும் 9, மற்றும் 10-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு இந்த நீதிபோதனை வகுப்புகளை எப்படி நடத்துவது என்பது குறித்து விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் செய்து வருகிறார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post