Title of the document

வரும் 24-ஆம் தேதி வரை பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் அரசு மருத்துவமனை, சுங்கச்சாவடிகள், பெட்ரோல் பங்குகளில்  பெற்றுக் கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் நவம்பர் 8-ஆம் தேதி நள்ளிரவு 12 மணியோடு செல்லுபடியாகாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். அதே நேரம், கடந்த வெள்ளிக்கிழமை வரை பெட்ரோல் பங்குகள், அரசு மருத்துவமனைகள், சுங்கச்சாவடிகளில் அவை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டது. பிறகு இது இன்று இரவு (நவம்பர் 14) நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், மக்கள் மத்தியில் இன்னமும் பணப் புழக்கம் அதிகரிக்காததால், இம்மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு வரை அரசு மருத்துவமனை, சுங்கச்சாவடிகள், பெட்ரோல் பங்குகளில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவலை பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த் தாஸ் இன்று காலை தில்லியில் அறிவித்தார்.

நாட்டில் நிலவும் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு பிரச்னை குறித்து மத்திய ‌அமைச்சர்கள்‌ மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். நேற்று நள்ளிரவு நடத்தப்பட்ட அவசர ஆலோசனையின்போது, இந்த முடிவு எட்டப்பட்தாக தெரிகிறது.

அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள், சுங்கச்சாவடிகளில் பழைய ‌‌ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்வதற்‌‌கான அறிவிப்பு இன்று இரவுடன் காலாவதியாக‌ இருந்‌த நிலையில் அது மேலும் 10 நாட்களுக்கு (நவ 24) நீட்டிக்கப்படுவதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

இதன் மூலம் மின்சார கட்டணம், உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரிகள் உள்ளிட்டவற்றை பழைய 500, 1000 ரூபாய் ஆக செலுத்தவும் 10 நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வங்கி தொடர்பாளர்களின் பணக் கையிருப்பு வரம்பு 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கிராமப்புற மக்களுக்கு பணம் கிடைப்பது எளிதாகும் என்று கூறினார். நடப்புக் கணக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள் ஒரே நேரத்தில் 50 ஆயிரம் ரூபாயை வங்கியில் இருந்து எடுக்கவும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post