கோப்ரா போஸ்ட் வலைத்தளம் நடத்திய ஆய்வில் மிகப்பெரிய நிதி நிறுவனங்களான ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி மற்றும் ஆக்சிஸ் வங்கிகள் பெருமுதலாளிகளின் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.
இது குறித்து கோப்ரா போஸ்ட் வலைத்தளம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் , நாங்கள் நடத்திய தேசிய அளவிலான இரகசிய விசாரணையில் ( Operation Red spider) மிகப்பெரிய நிதி நிறுவனங்களான ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி மற்றும் ஆக்சிஸ் வங்கிகள் கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகிறதை தெளிவாக காண முடிகிறது.
இது குறித்து கோப்ரா போஸ்ட் வளைதள ஆசிரியர் அனிரூத் பாகல் செய்தியாளர்களிடம் , நாங்கள் நாட்டின் ஐந்து மண்டலங்களில் உள்ள இந்த வங்கிகளின் பல கிளைகள், அதன் இன்சூரன்ஸ் நிறுவனங்ளிலும் இந்த ஆய்வை மேற்கொண்டோம்.அப்போது பண மோசடி மற்றும் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சி போன்ற சட்ட விரோத செயல்கள் செய்வதை தங்களது நடைமுறை தொகுப்பு செயலாக இந்த வங்கிகள் வைத்துள்ளது என்ற அதிர்ச்சிகரமான தகவலை அறிய முடிந்தது.
இந்த வங்கிகள் பின் வரும் முறைகளில் கறுப்பு பண மோசடியில் ஈடுபடுகின்றன.
1.பெரிய அளவிலான தொகைகளை பெற்று அதை இன்சூரன்ஸ் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்தல்.
2.புது வங்கி கணக்கு தொடங்கி வங்கியின் பல்வேறு திட்டங்களில் சேமிப்பது.
3.PAN கார்டு மற்றும் ஆதார் கார்டு இல்லாமல் பணம் முதலீடு செய்ய அனுமதித்தல்.
4. ஒரு குறிப்பிட்ட தொகையை பல பகுதிகளாக பிரித்து சந்தேகம் வராதபடி வங்கிகளில் சேமிப்பது.
5.பினாமி பெயரில் சொத்துகள் வாங்குவது.
6. வேறு நபர்களின் வங்கி கணக்கை பயன்படுத்துவது.
7. வாடிக்கையாளர்களிடம் டிமாண்ட் டிராப்ட் பெற்று கொண்டு அதை அவர்களின் கணக்கில் சேர்த்துக்கொள்ளாதது.
8. முதலீடு செய்பவர்களின் விபரங்களை ரகசியமாக வைத்துக்கொள்வது.
9. ஒன்றிற்கும் மேற்பட்ட கணக்குகளை தொடங்கி , அவர்களின் தேவைக்கேற்ப அதை மூட செய்வது.
10. கறுப்பு பணத்தை பல்வேறு விதங்களில் ,குடும்பத்தினர் அல்லாது வெவ்வேறு நபர்களின் பேரில் சேமிப்பது.
11.மிக பெரிய வங்கி லாக்கர்கள் ஒதுக்கி பாதுகாப்பாக கறுப்பு பணத்தை சேமிக்க உதவுவது.
12. பணம் எண்ணும் இயந்திரத்துடன் வாடிக்கையாளரின் வீட்டிற்கே சென்று கறுப்பு பணத்தை பெற்றுக்கொள்வது.
13.பார்ம் 60 போன்ற சிறப்பு விதிகளை பயன்படுத்தி கறுப்பு பணத்தை வங்கி கணக்கில் சேமித்து, அதை முதலீடு செய்ய உதவுவது.
14.NRE/NRO வங்கி கணக்குகள் மூலம் வாடிக்கையாளர்கள் கறுப்பு பணத்தை மாற்ற உதவி செய்வது.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஐசிஐசிஐ வங்கி , சட்டம் மற்றும் ஒழுங்கு முறையை பின்பற்றியே செயல்படுகிறோம்.எங்கள் வங்கியில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களும் நடத்தை குழு குறியீடு , AML மற்றும் KYC விதிகளை நன்கு அறிந்து தேர்ச்சி பெற்றவர்கள். இதற்காக தான் ஹீரோ டாலரன்ஸ் பாலிசி போன்றவற்றை எந்த விதி மீறல் இல்லாமலும் செயல்படுத்தி வங்கியில் என கூறியுள்ளது.
இந்த ஆய்வறிக்கை குறித்து நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை பெற விரும்புகிறோம். இது குறித்து சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்த உள்ளோம்.
இந்த ஆய்வறிக்கையால் இன்று காலை இந்த வங்கிகளின் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் ஐசிஐசிஐ – 1.38% , ஹெச்டிஎப்சி – 1.12% மற்றும் ஆக்சிஸ் வங்கி – 1.74% குறைந்துள்ளது என பிசினஸ் ஸ்டாண்டர்டு பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
Post a Comment