பட்டதாரிகளுக்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை வாய்ப்பு


இந்திய அணுமின் கழகத்தின் கீழ் செயல்படும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 56 உதவியாளர் பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
1. Assistant Grade I (Human Resources):


16 இடங்கள் (பொது - 8, ஒபிசி - 3, எஸ்சி - 5). 2. Assistant Grade I (Finance & Accounts):


8 இடங்கள் (பொது - 4, ஒபிசி - 3, பார்வைத் திறன் குறைந்தவர் - 1). 3. Assistant Grade I (Contracts & Materials Management):


16 இடங்கள் (பொது - 8, ஒபிசி - 5, எஸ்சி - 3). கல்வித்தகுதி:


மேற்குறிப்பிட்ட 3 பணிகளுக்கும் அறிவியல் அல்லது வணிகவியல் அல்லது கலை பாடத்தில் 50% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்டம். நிதி மற்றும் அக்கவுன்ட்ஸ் பிரிவுக்கு வணிகவியல் பட்டதாரிகளுக்கும், மெட்டீரியல்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட் பிரிவுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம் பட்டதாரிகளுக்கும் மற்றும் வணிகவியல் பட்டதாரிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இது தவிர ஆங்கிலத்தில் கம்ப்யூட்டரில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருப்பதோடு இந்தி டைப்பிங் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஆறு மாதங்களுக்கு குறையாத கம்ப்யூட்டர் படிப்பு அதாவது எம்.எஸ். விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் டெஸ்க் டாப் அப்ளிகேசன்ஸ், இ-மெயில் நிர்வாகம், இன்டர்நெட் சர்பிங் ஆகியவை தெரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது தகவல் தொழில்நுட்பம் பாடத்தில் பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆறு மாத கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்திருக்க வேண்டியதில்லை. 4. Steno Grade - 1:
16 இடங்கள் (பொது - 8, ஒபிசி - 5, எஸ்சி - 3).

தகுதி:


ஏதேனும் ஒரு பாடத்தில் 50% மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி மற்றும் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் மற்றும் ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். இதுதவிர எம்.எஸ். விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் டெஸ்க்டாப் அப்ளிகேசன்ஸ், இ-மெயின் மேனேஜ்மென்ட், இன்டர்நெட் சர்பிங் ஆகியவற்றில் 6 மாதங்களுக்கு குறையாத சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ்/ தகவல் தொழில்நுட்பம் பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இந்தி டைப்பிங்/ இந்தி ஸ்டெனோகிராபி படித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது:


31.12.2016 அன்று அனைத்து பணிகளுக்கும் 21 முதல் 28க்குள். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், பொதுப்பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், ஒபிசியினரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 13 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

முன்னாள் ராணுவத்தினருக்கு அவர்கள் ராணுவத்தில் பணியாற்றிய ஆண்டுகளுக்கு ஏற்றவாது வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். அசிஸ்டென்ட் பணிக்கு எழுத்துத்தேர்வு, கம்ப்யூட்டரில் டைப்பிங் தேர்வு, கம்ப்யூட்டர் அறிவு தேர்வு ஆகியவற்றின் அடிப்படையிலும், ஸ்டெனோகிராபர் பணிக்கு எழுத்துத்தேர்வு, டைப்பிங் தேர்வு, கம்ப்யூட்டர் அறிவு தேர்வு, சுருக்கெழுத்து தேர்வு ஆகியவற்றின் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒன்றுக்கு மேற்பட்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தனித்தனி விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

மாதிரி விண்ணப்பத்தை www.npcil.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து அதே வடிவத்தில் கம்ப்யூட்டரில் டைப் செய்ய வேண்டும். பின்னர் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Manager (HRM),
Recruitment Section,
Kudankulam P.O. Radhapuram Taluk,
Tirunelveli District.
PIN: 627106.
Tamilnadu.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
31.12.2016.