Title of the document
இந்தியாவில் ஆண்டுக்கு 50 லட்சம் பட்டதாரிகள் உருவாக்கப்படுவதாக அழகப்பா பல்கலைக்கழகப் பதிவாளர் வி. பாலசந்திரன் தெரிவித்தார்.
விருதுநகர் எம்.எஸ்.பி. நாடார் கல்வியியல் கல்லூரியில், கல்லூரிச் செயலர் ஜே.சரவணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:
பட்டம் பெற்ற இளைஞர்கள் சமுதாயத்திற்காகவும், நாட்டிற்காகவும் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. இந்திய விடுதலைக்கு பிறகு நமது முன்னோர்கள் கல்விக்காக ஏராளமான கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்களை உருவாக்கியுள்ளனர். மாணவ, மாணவிகளிடையே நல்ல அறிவு சார்ந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கல்வியை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்.
தரமான ஆசிரியர்கள், மாணவர்களால் மட்டுமே தரமான நாட்டினை உருவாக்க முடியும்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 851 பல்கலைக்கழகங்கள் 50 லட்சம் பட்டதாரிகளை உருவாக்கி வருகின்றன. அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு கோடி பட்டதாரிகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் பல்வேறு நாடுகளில் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களில் இந்தியர்களே அதிக அளவில் பணியாற்றும் நிலை ஏற்படும் என்பதை உலக மக்கள் உணரத் தொடங்கி விட்டனர்.
நாக் கமிட்டி 2,374 உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தை மதிப்பீடு செய்தனர். அதில் தலைசிறந்த 25 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கே.ஏ.ஷீலா, கல்லூரித் தலைவர் குமரன், துணைத் தலைவர் ஆனந்தராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post