Title of the document


சென்னை: காஸ் மானியம் பெறுவதற்கு ஆதார் எண் சமர்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 30 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.@sutitle@நேரடி மானியத் திட்டம்@@sutitle@@வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு காஸ் சிலிண்டருக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. முன்னர், இந்த மானியம் காஸ் ஏஜென்சிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டது. அதன்பின்னர், காஸ் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.@sutitle@ஆதார் கட்டாயம்@@sutitle@@இந்த மானியம் பெற வாடிக்கையாளர்கள் ஆதார் எண்ணை காஸ் ஏஜென்சி மற்றும் வங்கிகளில் சமர்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆதார் எண் சமர்பித்தவர்களுக்கு மட்டுமே காஸ் மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.@sutitle@நவம்பர் 30 வரை நீட்டிப்பு@@sutitle@@முன்னதாக, ஆதார் எண் சமர்பிக்க செப்டம்பர் 30 வரை இறுதி கெடு கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த கால அவகாசத்தை மேலும் 2 மாதங்கள் நீட்டித்து நவம்பர் 30 ம் தேதிக்குள் ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post