சென்னை: தமிழக முதல்வர் ஜெ., உடல் நலம் தேறி வருவதாக இன்று அப்பல்லோ
மருத்துவமனை வட்டாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .தலைமை
நிர்வாக அலுவலர் சுப்பையா விஸ்வநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறப்பட்டுள்ளதாவது: தமிழக முதல்வர் முதல்வர் உடல் நலம் தொடர்ந்து தேறி
வருகிறது. இது வரை வழங்கப்பட்டு வந்த சிகிச்சையே தொடர்ந்து வழங்கப்பட்டு
வருகிறது. மருத்துவ குழுவின் கண்காணிப்பில் தொடர்ந்து இருந்து வருகிறார்.
தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெற முதல்வர்
அறிவுறுத்தப்பட்டுள்ளார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Post a Comment