Title of the document
மத்திய அரசின் கல்வி உதவித் தொகையைப் பெற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், முழுநேரக் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.
9, 10-ஆம் வகுப்பு பயில்கிறவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ. 8,465 முதல் ரூ. 46,000 வரையிலும், பிளஸ் 1, பிளஸ் 2, பட்டயம் மற்றும் பட்டப் படிப்பு பயில்பவர்களுக்கு (டிப்ளமோ, பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., மருத்துவக் கல்வி, பொறியியல் உள்பட) உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ.
15,000 முதல் ரூ. 1 லட்சம் வரையிலும், பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது.
9, 10-ஆம் வகுப்பு பயில்பவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சம் வரையிலும், பிளஸ் 1 வகுப்பு முதல் பட்டப் படிப்பு பயில்பவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சம் வரையிலும், பட்ட மேற்படிப்பு பயில்பவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 6 லட்சம் வரையிலும் இருக்கலாம்.
மேற்படி விண்ணப்பதாரர்கள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில், வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இதனை மாணவர்கள் பயிலும் கல்வி நிறுவனத்தின் முதல்வர், தலைமையாசிரியர் மூலம் இணையதளம் வழியாக பரிந்துரை செய்ய வேண்டும்.
விண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மூலம் பரிந்துரை செய்யப்படும் என ஆட்சியர் அந்தச் செய்திக் குறிப்பில்
தெரிவித்துள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post