சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வின்
'ஹால் டிக்கெட்' வரும் நவ.,1ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம். நேஷ்னல் கவுன்சில் ஆப் எஜூகேசன் ரிசர்ச் அண்ட் டிரைனிங்
(என்.சி.ஆர்.டி) சார்பில் நடத்தப்படும் தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE
Exam) 05.11.2016ம் தேதி அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு
விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை
சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் அல்லது தலைமையாசிரியர்கள்
www.tngdc.gov.in என்ற இணையதளத்தில், பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள
User ID மற்றும் Passwordஐ பயன்படுத்தி இத்தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.