சென்னை: எம்.டி. (சித்தா) மருத்துவ பட்டமேற்படிப்பிற்கான கலந்தாய்வு சென்னை, அரும்பாக்கத்திலுள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் அக்டோபர் 31ம் தேதி தொடங்குகிறது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி பாளையங்கோட்டை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் 2016 - 2017 ஆம் கல்வியாண்டிற்குரிய எம்.டி.(சித்தா) மருத்துவ பட்டமேற்ப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு சென்னை, அரும்பாக்கத்திலுள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்திலுள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் 31.10.2016 அன்று முற்பகல் 11.00 மணியளவில் நடைபெறும்.
கலந்தாய்வு குறித்த தகவல், தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியே அழைப்புக்கடிதம் / குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
மேற்படி தகவல் / அழைப்புக்கடிதம் கிடைக்கப்பெறாதோர், வலைதளம் www.tnhealth.org -ல் தங்களது நுழைவுத் தேர்வு பதிவு எண் (E.E.No.) குறிப்பிட்டு தங்களுக்குரிய தகவல் / அழைப்புக்கடிதத்தை பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.