Title of the document


பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

 உரை:
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.

பழமொழி :

A thief knows a theif

பாம்பின் கால் பாம்பறியும்

பொன்மொழி:

வாழ்க்கையை ஏமாற்ற முடியாது. வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு புத்தகத்தின் இறுதிப் பக்கத்தில் விடை கிடையாது.

- கீர்கே கார்ட்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.கோடைக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் நாடு எது?
ஆஸ்திரேலியா

2.சூறாவளிகள் அதிகமாக உருவாகும் பெருங்கடல்?
அட்லாண்டிக்

நீதிக்கதை :

உதவி:-


கழுதை ஒன்று, நிறைய பொதி சுமந்து கொண்டு சென்றது. அதன் பின்னால் கழுதையின் எஜமானரும், அவர் வளர்க்கும் நாயும் வந்து கொண்டிருந்தனர். செல்லும் வழியில் புல் தரையைப் பார்த்ததும், கழுதையை அங்கு மேயவிட்டு மரத்தின் நிழலில் படுத்துத் தூங்கினார் எஜமானர்.

 கழுதை அங்கிருந்த புற்களை நன்கு மேய்ந்தது. ஆனால், நாய்க்குத் தின்பதற்கு எதுவுமில்லை. பசி, அதன் வயிற்றைப்பிடுங்கியது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நாய், கடைசியாக கழுதையைப் பார்த்து, “நண்பனே, என்னால் பசி தாங்க முடியவில்லை. எஜமான ரோ தூங்குகிறார். கொஞ்சம் கீழே படு. உன் பொதியில் உள்ள உணவில் கொஞ்சம் எடுத்துக் கொள்கிறேன்” என்று கெஞ்சியது.

நாயின் கெஞ்சலை கழுதை பொருட்படுத்தவில்லை. அது ஆனந்தமாகப் புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. நாயும் விடாமல் கெஞ்சிக் கொண்டிருந்தது.

நாயின் தொந்தரவு தாங்காத கழுதை, “என்னப்பா அவசரம்? எஜமானர் எழுந்திரிக்கட்டும். அவர் சாப்பிடும்போது உனக்கும்தான் கொடுப்பாரே” என்றது. வேறு வழியில்லாமல் நாய் சோர்ந்து போய் படுத்துக் கொண்டது.

அப்போது ஓநாய் ஒன்று மேய்ந்து கொண்டிருந்த கழுதை மீது பாய்ந்தது. பயத்தால் அலறிய கழுதை, “நண்பா, சீக்கிரம் ஓடிவந்து என்னைக் காப்பாற்று” என நாயைப் பார்த்து கதறியது.

படுத்திருந்த இடத்தை விட்டு எழுந்திரிக்காமல், “ஏன் அவசரப்படுகிறாய்? கொஞ்சம் பொறுமையாக இரு, எஜமானர் விழிக்கட்டும். அவர்தான் கட்டாயம் உனக்கு உதவி செய்வாரே” என்றது நாய்.

கழுதை, நாய்க்கு உதவி செய்யாமல் தான் செய்த தவறை நினைத்து வருந்தியது.

நீதி: நாம் மற்றவர்களுக்கு உதவினால் தான், மற்றவர்கள் நமக்கு உதவி செய்வார்கள்.

இன்றைய செய்தி துளிகள் :

1.திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது: காவேரி மருத்துவமனை அறிக்கை

2.இந்தியாவிலேயே ஐடிஐ பராமரிப்பதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது: அமைச்சர் நிலோபர் கபில் பேட்டி

3.பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

4.விண்வெளி ஆச்சர்யம்.. பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய்.. 15 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அதிசயம்!

5.இலங்கையுடன் ஒருநாள் போட்டி : இந்தியா யு-19 அணி அபார வெற்றி
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post