Title of the document

BEOs Counselling - வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 2025 2026 அட்டவணை






ஒவ்வொரு கல்வியாண்டிலும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வழக்கம் போல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த முறை இது 2021–2022 ஆம் கல்வியாண்டில் நடைபெற்றது. தற்போது, 2025–2026ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இந்த கலந்தாய்வில், தற்போதைய பணியிடத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும். எனினும், 30.06.2025 அன்று ஓய்வு பெற உள்ள அலுவலர்களுக்கு, அவர்கள் மூன்று ஆண்டுகள் பணியாற்றியிருந்தாலும், இக்கலந்தாய்வில் பங்கேற்கத் தவிர்வு அளிக்கப்படுகிறது.

மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்பவர்களுக்கு முன்னுரிமை அவர்களின் தற்போது பணியாற்றும் ஒன்றியத்தில் பணியேற்ற தேதியின் அடிப்படையில் வழங்கப்படும். அதே தேதியில் பலர் பணியேற்றிருந்தால்:

1. முதன் முதலில் வட்டாரக் கல்வி அலுவலராக பணியில் சேர்ந்த தேதி பார்க்கப்படும்.

2. இதுவும் ஒரே தேதியாக இருந்தால், பிறந்த தேதி (வயதில் மூத்தவர் முன்னுரிமை) பரிசீலிக்கப்படும்.

3. பிறந்த தேதியும் ஒரே மாதிரியானால், பெயரின் ஆங்கில எழுத்து வரிசை அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்படும்.

இந்த விதிமுறைகளின் அடிப்படையில் 2025–2026ஆம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.



# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post