Title of the document

_இடைநிலை ஆசிரியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட ஊதிய விபரங்கள்._

*எந்தெந்த ஊதிய குழுக்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கு இரண்டு விதமான அடிப்படை ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளது குறித்து விவரம்.*

*_முதலாவது ஊதியக்குழு (1960) ஊதியம்._*

*90-4-110-3-140*

*_இரண்டாவது ஊதியக்குழு (1970) ஊதியம்._*

*210-5-245-10- 325*

*_மூன்றாவது ஊதியக்குழு (1978) ஊதியம்._*

*350-10-420-15- 600*

*_நான்காவது ஊதியக்குழு (1988) ஊதியம்._*

*1200-30-1520- 40-2040*

*_ஐந்தாவது ஊதியக்குழு (1996) ஊதியம்._*

*4500-125-7000*

மேற்கண்ட 5 ஊதிய குழுக்களிலும் இடைநிலை ஆசிரியர் பதவிக்கு ஒரே ஒரு அடிப்படை ஊதியம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது.

பணிபுரிந்த ஆண்டுகளுக்கு ஏற்ப ஊதிய உயர்வு மட்டுமே வித்தியாசம் இருக்கும். 


*_ஆனால் ஆறாவது ஊதியக் குழுவில் (2006) ஊதியம்._*

*8370+2800 தர ஊதியம்*
_*(1.6.2009க்கு முன்பு)*_

*5200+2800 தர ஊதியம்* _*(1.6.2009க்குப் பிறகு)*_

_என இரு வேறு அடிப்படை ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது இதுவே முதல் முறை._

இது போன்று தமிழகத்தில் உள்ள மற்ற துறைகளுக்கு இருந்தாலும்,மிக மிகப்பெரிய பாதிப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கே ஏற்பட்டது.

_மூத்த ஆசிரியர்களுடைய ஊதியத்தை, பின்னால் வந்த ஆசிரியர்கள் கேட்கிறார்கள் என்ற தவறான வாதத்தை தயவுசெய்து இனிமேலும் வைக்க வேண்டாம். மற்றவர்களை குழப்பவும் வேண்டாம்._

 புரியாதவர்கள் இதை பார்த்தாவது புரிந்து கொள்ளுங்கள்.

*_ஏழாவது ஊதியக்குழு (2016) ஊதியம்_*

*20600-75900*

ஏழாவது ஊதியக்குழு வில்  முன்னர் பணிபுரிந்தவர்களுக்கும் பின்னர் பணிக்கு வருபவர்களுக்கும் பணிபுரிந்த ஆண்டுக்கான ஊதிய உயர்வு மட்டுமே வித்தியாசம் இருக்கும். 

இதற்கு முன்னர் உள்ள 5- ஊதிய குழுக்களிலும் அப்படி அல்ல 7-வது ஊதிய குழுவிலும் அப்படி அல்ல. 

ஆறாவது ஊதிய குழுவில் ஏற்பட்ட அநீதி 15 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது, இதனை களையவே கடும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.

ஆரம்ப காலகட்டங்களில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தனக்கு பின்னால் உள்ள  சந்ததிகளுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று போராடினார்கள்...

 தற்போது அது போன்ற சூழ்நிலை இல்லை இருப்பினும்.

 முடிந்தால் உதவுங்கள் அல்லது அமைதியாக கடந்து செல்லுங்கள்.

உச்சபட்ச வேதனையில் 

_2009- க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள்_
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post