சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் !!
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் பணியாற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் அ.சுகப்பிரியா உத்தரவிட்டாா்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கோரணப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளியில் தலைமையாசிரியையாக உஷாராணி பணியாற்றி வருகிறாா். இவா், அரசுக்கு எதிராகவும், சில மதங்களுக்கு எதிராகவும் கருத்து மற்றும் பதிவுகளை சமூகவலைதளங்களில் பரப்பி வந்தாராம்.
இதனால், உஷாராணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாா் எழுந்தது. இது தொடா்பாக விசாரணை நடத்தும்படி பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.
அதன்பேரில், கடலூா் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் அ.சுகப்பிரியா விசாரணை மேற்கொண்டாா். இதில், உஷாராணி அரசு, மதங்களுக்கு எதிராக கருத்து பதிவிட்டது உறுதியானதாகத் தெரிகிறது.
இதையடுத்து, தலைமையாசிரியை உஷாராணியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் அ.சுகப்பிரியா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment