Title of the document

பள்ளி மாணவர் தற்கொலை - தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு

தாம்பரம் அருகே ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்கள் மீது பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை, தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் வேல் நகர் பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவரது மனைவி கலாவதி. இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகனும், 9 வயதில் மகளும் இருந்த நிலையில், அலெக்சாண்டர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், கலாவதி தனது இரு பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்தார். சிறுவன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், சிறுவன் நேற்று (பிப்.27) வழக்கம் போல பள்ளிக்குச் சென்றுள்ளார். கலாவதியும் வழக்கம் போல தனது பணிக்காக சென்றுள்ளார். இதையடுத்து நேற்று காலை சுமார் 10 மணியளவில் சிறுவன் படித்து வரும் அரசு பள்ளியிலிருந்து ஆசிரியர் ஒருவர் கலாவதிக்கு தொடர்பு கொண்டு பள்ளிக்கு வருமாறு அழைத்துள்ளார்.

ஆனால் காலாவதி தான் பணியில் இருப்பதால் தற்போது வர முடியாது மதியத்திற்கு மேல் வருகிறேன் என தெரிவித்துள்ளார். ஆனால் காலாவதி பள்ளிக்கு செல்லவில்லை. இதையடுத்து இரவு 9 மணி அளவில் பணியை முடித்துவிட்டு கலாவதி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீடு உள்பக்கம் தாழிட்டு இருந்துள்ளது.

வெகு நேரம் கதவைத் தட்டியும் யாரும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அவரது மகன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பின்னர் அவரை மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

பின்னர் இச்சசம்பவம் குறித்து தகவல் அறிந்த பீர்க்கன்காரணை போலீசார் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வந்தனர்.

அப்போது கலாவதி தன் மகன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளதாக கூறி கடிதத்துடன் புகார் ஒன்றை அளித்தார். அந்த கடிதத்தில், '' தான் சக மாணவரை ஒருவரை தாக்கியதாக என் மீது பொய்யாக குற்றம் சுமத்தி என்னை குற்றவாளி என கூறினார்கள். மேலும் தன்னை தப்பு, தப்பாக பேசினார்கள். மேலும் தனது பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் எப்போதும், '' நீ ஏன் உயிரோடு இருக்க?'' என திட்டி கொண்டே இருப்பார். எனவே தான் நான் இந்த முடிவை எடுத்தேன்'' என குறிப்பிட்டிருந்தது.

எனவே இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்யாத பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் எனது மகனை ஏன் உயிரோடு இருக்க என திட்டிய உதவி தலைமை ஆசிரியர், என் மகன் மீது வீண் பழி சுமத்திய ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலாவதி புகாரில் தெரிவித்தார்.

புகாரின் அடிப்படையில் பீர்க்கன்காரணை காவல் ஆய்வாளர் மாணவனை தற்கொலைக்கு தூண்டியதாக தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் என மூவர் மீது 107 BNS தற்கொலைக்கு தூண்டுதல் என ஒரு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் பெருங்களத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அடுத்தகட்டமாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட மூன்று ஆசிரியர்களையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல: 

சொந்தக் காரணங்களாலோ அல்லது மனஅழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post