Title of the document

மகளிர் தினம் மார்ச் 8 - உருவானது எப்படி ? மகளிர் தினத்தின் வரலாறு என்ன ?

சர்வதேச மகளிர் தினம் - மார்ச் 8



சர்வதேச மகளிர் தினம் 2025 மார்ச் 8 அன்று "செயல்களை துரிதப்படுத்து" என்ற தீமுடன் கொண்டாடப்படுகிறது. 1908 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் பெண்கள் உரிமைக்காக போராடியதை நினைவுகூரும் நாள்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினமாக (சர்வதேச மகளிர் தினம் 2025) கொண்டாடப்படுகிறது. இந்த நாள் குறிப்பாக பெண்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில், பெண்கள் மீதான மரியாதை, அவர்களின் உரிமைகள், அவர்களின் சாதனைகள் மற்றும் பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக மக்கள் கொண்டாடப்படுகிறார்கள். இந்தாண்டு சர்வதேச மகளிர் தினம் 2025, சனிக்கிழமை ஆண்டு கொண்டாடப்படுகிறது.

ஏன் மகளிர் தினம்?

மகளிர் தினத்தின் நோக்கம் குறித்து ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், உழைக்கும் பெண்களின் உரிமைகளை உறுதிசெய்வதும், அனைத்துப் பணிகளிலும் அனைத்து நிலைகளிலும் பாலினச் சமத்துவத்தை உறுதி செய்வதும்தான்.

மகளிர் தினத்தின் வரலாறு?

வீட்டு வேலைகளுக்கு மட்டுமே பெண்கள் சரிவருவார்கள் என்ற எண்ணம் 18ம் நூற்றாண்டு காலகட்டத்தில் மேலோங்கியது. இந்த நிலை மெல்ல மாற்றமடைந்து, 1850-களில் பல்வேறு பணிகளில் பெண்கள் கால்தடம் பதித்தனர். ஆண்களுக்கு நிகராக பெண்கள் கால்தடம் பதித்தாலும், வேலைக்கான சம்பளத்தில் தொடர்ந்து பாகுபாடு காட்டப்பட்டது. ஆண்களுக்கு நிகராக பணியாற்றியபோதிலும் உரிமையிலும், ஊதியத்திலும் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டது. இதனால் வெகுண்டெழுந்த பெண்கள் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் 1910-ல் மாபெரும் உரிமை மாநாட்டை நடத்தினர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்களும் அதில் கலந்து கொண்டு, தங்கள் உரிமைகளுக்காக கைகோர்த்து ஒற்றுமையாக நின்றனர். சர்வதேச சோஷியலிஸ்ட் பெண்கள் மாநாடாக அறியப்பட்ட இதில், பெண்களின் உரிமைகள் குறித்து பேச உலகம் முழுவதும் குறிப்பிட்ட ஒரு நாளை பெண்கள் தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று மகளிர் தின கொண்டாட்டத்திற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரா ஜெட்கின், அந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். பெண்கள் பிரச்சினை அனைத்துடனும், வாக்குரிமைக் கோரிக்கையையும் இணைத்து விவாதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த மாநாட்டில் கொண்டாட்டத்திற்கான தேதி இறுதி செய்யப்படவில்லை.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post