Flash News : TET பதவி உயர்வு வழக்கு - நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய ஆசிரியர்களின் விவரங்களை கோரி - இயக்குநர் உத்தரவு!
புதுடெல்லி உச்சநீதிமன்ற வழக்கு எண் Civil Appeal No (S) 1384/2025.
தொடக்கக் கல்வி அலகில் பணிபுரியும் இடைநிலை / தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் ஆகியோரின் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற சென்னை உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பாணையின் மீது திருமதி.B. ஆனி பாக்கிய ராணி என்பாரால் பார்வையில் கண்டவாறு புதுடெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மனுதாரரால் தொடரப்பட்ட வழக்கு இன்று மாண்புமிகு நீதியரசர் முன்பு விசாரணைக்கு வரப் பெற்று ஆசிரியர்கள் பயின்ற கல்வித் தகுதி மற்றும் கல்வி நிறுவனம் போன்ற விவரங்களை 03.03.2025 அன்று நடைபெறும் விசாரணையில் பதிலுரையாக தாக்கல் செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீதிமன்ற விசாரணைக்கு பதிலுரையாக சமர்ப்பிக்கும் வகையில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Excel படிவத்தில் ஆசிரியர்களின் விவரம் ஏற்கனவே உள்ளது. அதில் கடைசி மூன்று கலத்திலுள்ள இடைநிலை / தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர்களின் கல்வித் தகுதிகளின் விவரங்களை தனித்தனியாக பூர்த்தி செய்து 28.02.2025 அன்று முற்பகல் 01.00 மணிக்குள் இவ்வியக்கக deesections@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
DEE - TET Case Proceedings - Download here
Post a Comment