JACTTO GEO போராட்டம் - தற்போது நடைபெற்று முடிந்த அமைச்சர்கள் உடனான பேச்சுவார்த்தை முடிவுகள் !!
![]() |
ஜாக்டோ ஜியோ |
இன்றைய தினம் காலை 11 மணி அளவில் தலைமைச் செயலகம் பத்தாவது மாடியில் மாண்புமிகு நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் இது ஏவ வேலு அவர்கள் தலைமையில் மாண்புமிகு நிதியமைச்சர் மற்றும் மாநில பள்ளி கல்வி அமைச்சர் மற்றும் மாண்புமிகு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆகியோர் உடன் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் உடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- பேச்சுவார்த்தையில் 32 ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டு நமது கருத்துகளை எடுத்துரைத்தனர். ஜாக்டோ ஜியோ வின் 10 அம்ச கோரிக்கைகளும் முழுமையாக அமைச்சர் குழுவிடம் மிக விளக்கமாக தெரிவிக்கப்பட்டது.
- இறுதியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அவர்கள் தங்கள் கருத்துக்களை அனைத்தையும் உள்வாங்கி இன்றைய தினம் மாலை 7 மணி அளவில் முதல்வரை சந்தித்து 8 மணி அளவில் மீண்டும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை தலைமைச் செயலகத்திலேயே சந்தித்து விவரங்களை தெரிவிப்பதாக தெரிவித்து கூட்டம் முடிவடைந்தது.
- உறுதியான எந்த முடிவும் எட்டப்படாத காரணத்தினால் போராட்டம் நடவடிக்கைகள் எந்தவித தடையும் இன்றி தொடர்கின்றன ..
- முதலமைச்சருடனான சந்திப்புக்கு பிறகு அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் போராட்டத்தை தொடர்வதா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் போராட்டம் வாபஸ் பெறப்படும். இல்லையேல் போராட்டம் தொடரும்.
- இரவு 8 மணிக்கு நடைபெறும் அமைச்சர் குழு உடனான பேச்சுவார்த்தைக்கு பின் முடிவுகள் தெரிவிக்கப்படும் ..
தகவல் பகிர்வு
- கே.பி ரக்ஷித்
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
Post a Comment