Title of the document

 பணி நிரந்தரம் - பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

பணி நிரந்தம் செய்ய கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். 

அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில்வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு ரூ.10,000 மாத சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணி நிரந்தரம் செய்யக் கோரிபகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்ற 400-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகதாஸ் கூறுகையில், ‘‘13 ஆண்டுகளாக எங்கள்கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 

பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். ஆனால், எந்த பலனும் இல்லை. திமுக தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதாக அறிவித்தது. ஆனால், இதுவரை தமிழக அரசு அதற்கான முயற்சி எடுத்ததாக தெரியவில்லை. 

அதனால் அரசுக்கு நினைவூட்டும் விதமாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறோம். எங்கள்நிலையை உணர்ந்து பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். இல்லையெனில் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்போம்’’ என்றார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post