TRB - BT & BRTE தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?
பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பணியில் 2 ஆயிரத்து 582 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு பிப்ரவரி 4ஆம் தேதி நடைப்பெற்ற போட்டி எழுத்துத் தேர்வினை எழுதிய 41 ஆயிரத்து 485 பேரின் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் பிறத்துறைப் பள்ளிகளில் காலியாக 2 ஆயிரத்து 582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வுக்கு 41 ஆயிரத்து 485 தேர்வர்கள் விண்ணப்பம் செய்தனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு 130 மையங்களில் பிப்ரவரி 4ஆம் தேதி நடத்தப்பட்டது. தமிழ் மொழி திறன் அறிவிற்கான 30 கேள்விகள் 50 மதிப்பெண்களுக்கும், முதன்மைப் பாடத்தில் (தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல்) இருந்து 150 கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கு இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து, தேர்வுக்கான வினாக் குறிப்புகள் பிப்ரவரி 19ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் மீது தேர்வர்கள் பிப்ரவரி 25ஆம் தேதி வரையில் தங்களின் சந்தேகங்களை ஆதாரங்களுடன் தெரிவிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது
இந்த நிலையில், தற்போது தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புகள் நடத்தப்பட்டு, பணி நியமனத்திற்கு பள்ளிக்கல்வித்துறைக்கு அளிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment