Local Holiday - மார்ச் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் திருவிழா திருத்தேர் உற்சவம் வரும் மார்ச் 14ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதன் காரணமாக மார்ச் 14ஆம் தேதி அன்று ஒரு நாள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவுலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறைந்த பணியாளர்களை கொண்டு செயல்படும்.
மார்ச் 14ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கு முன்னதாக தேர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தால் திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்படும் என்றும், மார்ச் 23ஆம் தேதி அன்று இதனை ஈடு செய்யும் விதமாக பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment