Title of the document

2010 ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு "சமவேலைக்கு சமஊதியம்" வேண்டி போராட்டம் நடத்திய டிட்டோ-ஜாக் அமைப்பு !



2010ல் டிட்டோ-ஜாக் கோரிக்கைகள் : 

  1. மத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு 1-1-2006 முதல் (9300-34800) தர ஊதியம் (Grade Pay) 4200-PB2 க்கு கொண்டு வந்து நிர்ணயம் செய்துள்ளது போல் தமிழகத்திலுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதிய மாற்றத்தினை நிர்ணயம் செய்து அமுல்படுத்த வேண்டும். 
  2. இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பு இல்லாவிடினும் 10 ஆண்டு பணி முடித்தால் மத்திய அரசு போல தர ஊதியம் (Grade Pay) 4600 உயர்த்தி வழங்கி PB2 க்கு கொண்டுவர வேண்டும். 20 ஆண்டு பணி முடித்தோருக்கு பதவி உயர்வு வாய்ப்பு | இல்லாவிடினும் மத்திய அரசு போல் தர ஊதியம் ரூ.4800 உயர்த்தி வழங்க வேண்டும்.
  3. இரு வேறுபட்ட ஊதியம் சமநிலையாக்கப்பட வேண்டும். தமிழத்தில் 1-6-2006 முதல் 2 பணிவரன்முறை செய்யப்பட்டு நியமனம் செய்துள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.11,170/- ஆனால் 1-6-2009 முதல் நியமனம் செய்யப்பட்டு வருகின்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் (5200+2800) ரூபாய் 8 ஆயிரம் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது. பொதுக் கல்வி தகுதியுடன் இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சியும் முடித்து ஒரே தகுதி நிலையில் பணியாற்றுபவர்களின் ஊதியத்தில் வேறுபடுத்தி மாதந்தோறும் ரூ.3,170/- ஊதியக்குறைப்பு செய்துள்ளதை மாற்றியமைத்து சமநிலை ஊதியம் நிர்ணயம் செய்திட வேண்டும். ஆகவே மத்திய அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
  4. மத்திய அரசு போல் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியமாகவும் செய்து காஊதியம் -4300 லிருந்து 4600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
  5. மத்திய அரசு போல் பட்டதாரி ஆசிரியர்கள், தர ஊதியம் ரூ.4800 ஆகவும் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தர ஊதியம் சாதாரணநிலை ரூ.5400 ஆகவும், தேர்வு நிலை தர ஊதியம் ரூ.6600/- ஆகவும் சிறப்பு நிலைக்குத் தர ஊதியம் ரூ.7600/- ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.
  6. கண்காணிப்பாளர் பதவிக்கு மேல் அலுவலரான வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய துணையாளர், செயற்பொறியாளர் ஆகிய பிரிவினருக்கு 6-வது ஊதியக்குழுவில் ஊதியம் மேம்படுத்தப்பட்டு அமுல்படுத்தியுள்ளது போல் உதவி / கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு ஒரு நபர் குழுவினால் கைவிடப்பட்டுள்ள நிலைமைதனை மாற்றியமைத்து மேம்படுத்தப்பட்ட ஊதியம் நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும்.
  7. மத்திய அரசு அனுமதித்து வழங்கிவேதுபோல் பெண் ஆசிரியர்கள் - பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாதகாலமாக உயர்த்தி வழங்கி அறிவிக்க வேண்டும்.
  8. மத்திய அரசு போல் தமிழகத்திலும் வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி இணையாக அறிவிக்க வேண்டும்.
  9. மத்திய அரசு வழங்கியுள்ளது போல் போக்குவரத்துப்படி, குழந்தைகள் கல்விப்படி வழங்கிட வேண்டும்.
  10. 20 ஆண்டு பணிமுடித்தோருக்கு மத்திய அரசு போல் முழு ஓய்வூதியம் அறிவிக்க வேண்டும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post