4th - 8th Std Annual Exam Time Table மாற்றம் செய்து கொள்ள அனுமதி - Director Proceedings
2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி இறுதித் தேர்வுகள் நடத்துதல் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டன.
ஈகைப் பெருநாளை முன்னிட்டு பள்ளித் தேர்வுகளின் தேதியை மாற்றி அமைக்கக் கோரி பார்வை ( 3 ல் கண்டுள்ளபடி மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களால் அரசுக்கு கோரிக்கைகள் வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி , தேர்வு கால அட்டவணையில் பின்வருமாறு மாற்றம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
பார்வை ( 1 ) யில் காணும் தேர்வு கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்ட 4 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகளை 104.2024 மற்றும் 12.04.2024 ஆகிய தேதிகளுக்கு பதிலாக 04.04.2024 மற்றும் 06.04.2024 ஆகிய தேதிகளில் பள்ளி அளவிலேயே நடத்திக் கொள்ள சம்பந்தப்பட்ட உருது பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கிட சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் உரிய அறிவுரைகள் வழங்குமாறு சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment