2024 - 2025 ஆம் கல்வியாண்டில் பாடவேளை அட்டவணையில் ஆய்வக செய்முறை வகுப்பு இடம்பெற வேண்டும் - DSE Proceedings
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு / நகராட்சி உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் 6 முதல் 10 வகுப்பு வரை பயின்று வரும் மாணவ / மாணவியர்களுக்கு ஆய்வகத்தில் செய்முறை பாடவேளை மற்றும் மேல்நிலை வகுப்பு மாணவ ஆய்வகங்களில் செய்முறை வகுப்பு அட்டவணை தலைமையாசிரியரால் தயார் செய்து மாணவியர்களுக்கு பாடவேளைகளுக்கான கால வழங்கப்படவேண்டும்.
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி / மாநகராட்சி / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களின் கற்றல் அடைவினை மேம்படுத்தும் பொருட்டு ஆய்வகச் செயல்பாடுகள் மூலம் உற்றுநோக்கி ஆய்ந்தறிதல் , செய்து கற்றலின் மூலம் நிலையான கற்றல் அனுபவத்தைப் பெறுதல் , அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுதல் , மொழி ஆய்வகங்களின் மூலம் மொழி ஆளுமை மூலம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு திறன்களை பெறும் நோக்கில் பின்வரும் ஆய்வகங்களின் செல்பாடுகள் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. அடல் டிங்கரிங் ஆய்வகம்
2. உயர்தொழில்நுட்ப ஆய்வகம் / மெய்நிகர் வகுப்பறை மூலம் கற்பித்தல்
3. அறிவியல் ஆய்வகங்கள்
4. மொழி ஆய்வகங்கள்
5. தொழிற்கல்வி ஆய்வகங்கள்
6. கணித ஆய்வகங்கள்
கல்வி ஆண்டின் அனைத்து தொடக்கத்தில் வகுப்புகளுக்கும் ஆசிரியர்களுக்கும் கால அட்டவணை தயாரித்த பின்னர் அதன் அடிப்படையில் எந்தெந்த வகுப்பு மாணவ / மாணவிகள் எந்தெந்த ஆய்வகங்களை எந்தெந்த பாடவேளைகளில் பயன்படுத்தலாம் எனத் தலைமையாசிரியர் திட்டமிடுதல் வேண்டும் .
Post a Comment