Title of the document

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது தொடங்குகிறது ?

1 முதல் 9ம் வகுப்புகளுக்கு ஏப்.13ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை: 

நாட்டின் 18வது நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளால், தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 2ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடக்கும்.

ஏப்ரல் 13 ம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும், ஆசிரியர்கள் 19ம் தேதி நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

23ம் தேதி முதல் 26ம் தேதி வரை 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்துதல், தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். 26ம் தேதி இந்த கல்வி ஆண்டுக்கான கடைசி வேலை நாளாக இருக்கும்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும். தேர்வுகள் காலை, மதியம் என இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளன. இந்நிலையில், 1 முதல் 5ம் வகுப்புக்கான தேர்வுகளை பொறுத்தவரை ஏப்ரல் 2ம் தேதி மொழிப்பாடம், 3ம் தேதி ஆங்கிலம், 5ம் தேதி கணக்கு, 8ம் தேதி சிறுபான்மைமொழி, 10ம் தேதி அறிவியல், 12ம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடக்கும்.

5ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 2ம் தேதி காலையில் மொழிப்பாடம், 3ம் தேதி ஆங்கிலம், 4ம் தேதி மதியம் உடற்கல்வி, 5ம் தேதி காலை கணக்கு, 8ம் தேதி மதியம் விருப்ப மொழிப்பாடம், 10ம் தேதி காலை அறிவியல், 12ம் தேதி காலை சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். தேர்வுகள் காலை 10 மணி முதல் 12மணி வரையிலும், மதியம் 2மணி முதல் 4 மணி வரையும் நடக்கும். 



1 - 9th Annual Exam Time Table 2024 


1 - 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் ஆண்டு இறுதி தேர்வுகளை முடிக்க தமிழக பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் உத்தரவு.




1 முதல் 5 வகுப்பு களுக்கான மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை :




6 முதல் 9 வகுப்பு களுக்கான தேர்வு கால அட்டவணை :



பள்ளி இறுதித் தேர்வு மற்றும் விடுமுறை

* தேர்வுகள்

02.04.2024 முதல் 12.04.2024 வரை

*கோடை விடுமுறை

(மாணவர்களுக்கு)

13.03.2024 முதல்..

* ஆசிரியர்கள் பள்ளி வருகை.

(12.04.2024 க்கு பிறகு)

23.04.2024 முதல் 26.04.2024 வரை

* கோடை விடுமுறை

( ஆசிரியர்களுக்கு)

27.04.2024 முதல் அறிவிப்பு வெளியாகும் வரை

(உத்தேசமாக ஜூன் 5 பள்ளி திறப்பு after counting )
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post