இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தொடரும் - SSTA அறிவிப்பு !
- எதுவரைக்கும் போராட்டம் கோரிக்கை முடியும் வரை போராட்டம்...!
- உயிரைக் கொடுத்தேனும் இழந்த உரிமை மீட்டெடுப்போம்.
நாளை 26.02.2024 முதல் சென்னை DPI முற்றுகை போராட்டமும், அனைத்து மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டமும் நடைபெறும் :
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தமிழக அரசு முடிவுக்கு கொண்டு வராததால் தமிழகத்திலுள்ள மாவட்ட தலைநகரங்களில் 26.02.2024 திங்கள் முதல் போராட்டம் நடைபெறும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதிய" தேர்தல் வாக்குறுதி 311 ஐ நிறைவேற்றக்கோரி கடந்த ஐந்து நாட்களாக டிபிஐ வளாகத்தில் தொடர் முற்றுகை போராட்டங்களை நடத்தி வருகிறோம், வரும் சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களும் போராட்டம் தொடரும். மேலும் இதுவரை அரசு அழைத்து கோரிக்கை குறித்து பேசி முடிவு செய்யாத காரணத்தினால் அடுத்த கட்ட போராட்டத்திற்கு எங்களது அமைப்பின் சார்பாக தயாராகிறோம். இரண்டொரு நாளில் அழைத்துப் பேசி கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் வரும் திங்கட்கிழமை பிப்ரவரி 26 முதல் மாநில தலைநகரான சென்னையில் தொடர் முற்றுகைப் போராட்டமும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் கைதாகும் ஆசிரியர்களுக்கு ஆதரவாகவும் கோரிக்கையை அழைத்துப் பேசி முடிவு செய்யாததை கண்டித்தும் மாவட்டத் தலைநகரங்களிலும் (முதன்மை கல்வி அலுவலகத்தில்) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவே போராட்டத்தை இன்னும் தீவிரமாகாமல் தமிழக அரசின் மாண்புமிகு முதல்வர் அவர்கள் அழைத்து பேசி உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
_ நன்றி_
ஜே.ராபர்ட்
SSTA- மாநில பொதுச்செயலாளர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment