Title of the document

Income Tax - அனைத்துநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு


🔵 சென்ற வருடம் மூத்த ஆசிரியர்கள் சிலருக்கு மட்டும் தான் புதிய வருமான வரி முறை (New Regime) பயனுள்ளதாக இருந்தது.

ஆனால், இந்த வருடம் பெரும்பாலானவர்களுக்கு புதிய வருமான வரி முறையில் (New Regime) வருமான வரி குறைவாக வருகிறது.

🔵 எனவே, ஆசிரியர்கள் அனைவரும் இரண்டு முறையிலும்

(Old Regime & New Regime)

வருமான வரி கணக்கீடு செய்து நமக்கு எது சாதகமாக இருக்கிறதோ அதை தேர்வு செய்து கொள்ளலாம்.

🔵 இதற்குக் காரணம் இரண்டு முறைகளிலும் உள்ள Tax Slab இல் உள்ள வித்தியாசங்கள்

🔵 *Tax Slab in Old Regime*

👉🏻Upto 2,50,000 - Nil Tax

👉🏻2,50,001 to 5,00,000 - 5%

👉🏻5,00,001 to 10,00,000 - 20%

👉🏻Exceeding 10,00,000 - 30%


🔵 *Tax Slab in New Regime*

👉🏻Upto 3,00,000 - Nil Tax

👉🏻3,00,001 to 6,00,000 - 5%

👉🏻6,00,001 to 9,00,000 - 10%

👉🏻9,00,001 to 12,00,000 - 15%

👉🏻12,00,001 to 15,00,000 - 20%

👉🏻Exceeding 15,00,000 - 30%


🔵 ஒருமுறை புதிய வருமான வரி (New Regime) முறைக்கு மாறி விட்டால் மீண்டும் பழைய முறைக்கு (Old Regime) வர முடியாது என்பது தவறான தகவல். நாம் எப்பொழுது வேண்டுமானாலும் நமக்கு எது வசதியோ அதற்கு மாறிக் கொள்ளலாம்.

🔵 ஆனால் வியாபாரம் மற்றும் பிற வழிகளில் பிற வருமானம் உள்ளவர்கள் மட்டும் தான் மீண்டும் பழைய முறைக்கு மாற முடியாது.


🔵 மார்ச் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை

👉🏻நாம் பெற்ற சம்பளம்,

👉🏻DA Arrears,

👉🏻போனஸ்,

👉🏻இதர Arrears

ஆகியவற்றின் கூட்டுத்தொகை தான் Gross Salary Income.


🔵 Old Regime-ல்

👉🏻HRA,

👉🏻Standard Deduction 50,000,

👉🏻Professional Tax,

👉🏻HBA Interest,

👉🏻Conveyance Allowance (Physically Handicapped only),

👉🏻Hill Allowance,

👉🏻Savings (Maximum GPF Employee -1,50,000, CPS Employee - 2,00,000),

👉🏻NHIS - Medical Insurance - Educational Loan Interest - CMPRF

ஆகியவற்றைக் கழித்த பிறகு வருவது தான்

Net Taxable Income.

இதை Nearest ten க்கு Round off செய்ய வேண்டும்.

🔵 New Regime-ல்

👉🏻Standard Deduction 50,000,

👉🏻Conveyance Allowance (Physically Handicapped only)

இவை இரண்டை மட்டும் தான் கழிக்க வேண்டும். அது கழித்த பின் வருவது Net Taxable Income.

இதை Nearest ten க்கு Round off செய்ய வேண்டும்.

🔵 Net Taxable Income-க்கு தான் வருமான வரி கணக்கிடவேண்டும்.

🔵 வருமான வரியை Nearest ten க்கு Round off செய்ய கூடாது.

-------------------------------------------------

🔵 வருமான வரித் தொகைக்கு Health & Education Cess 4% கணக்கிட வேண்டும்.

🔵 CPS இல் உள்ளவர்கள் - தாம் செலுத்தும் CPS சந்தாவை மட்டும் தான் கணக்கு காட்ட வேண்டும். அரசு செலுத்தும் 10% தொகையை கணக்கில் சேர்க்கக் கூடாது.

🔵 CPSஇல் உள்ளவர்கள் தங்களுடைய CPS சந்தா தொகையில் u/s 80 CCD(1B) இல் 50,000 ரூபாயும், u/s 80 CCD(1)இல் மீதி தொகையையும் கழிக்கலாம்.

🔵 HBA Interest, HBA Principal உள்ளவர்கள் HRA-வை கழிக்கக் கூடாது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post