பழைய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் நிச்சயம் நிறைவேற்றுவார் - சபாநாயகர் அப்பாவு பேச்சு
நாகர்கோவில் கோட்டாறு நாராயண குரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:
முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தை தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மிகப்பெரிய நிதி நெருக்கடி அரசுக்கு உள்ளது.
இந்த சுமையை தாண்டி மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1000 ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. ஒன்றிய அரசு நிதியாக நாம் செலுத்துகின்ற வரிக்கு அவர்கள் திருப்பித் தருவது ஒரு ரூபாய்க்கு 29 காசு தான். நமக்கு சரியான நிதி பகிர்வு இருந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் அறிவித்து விடுவார்.
முதல்வர் நிச்சயமாக சொன்னதை செய்து விடுவார். ஜாக்டோ ஜியோ அமைப்பினரிடம் முதல்வர் சந்தித்து அவர்களை அழைத்துப் பேசி ஒரு ஒரு உறுதியை கொடுத்துள்ளார். எனவே அளித்த வாக்குறுதியை இந்த அரசு நிச்சயம் நிறைவேற்றும். இவ்வாறு அவர் பேசினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment