01.01.2024 முதல் அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு !
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அரசு ஊழியர்களுக்கு, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப் படி உயர்வு வழங்கப் படும்.
கடந்த டிசம்பர் 2023 வரை, விலைவாசி உயர்வின் அடிப்படையிலான AICPIN குறியீடு நேற்று (31.01.2024) வெளியிடப்பட்டது. இதன்படி கணக்கீடு மேற்கொள்ளப் பட்டதன் படி, அகவிலைப் படி 4% உயர்ந்து, 46% லிருந்து 50% ஆக அகவிலைப் படி உயர்கிறது.
இந்த கருத்துருக்கள், பிப்ரவரி இறுதியில், ஒன்றிய நிதி அமைச்சகம் மூலம் அமைச்சரவைக்கு பரிந்துரைக்கப் படும்.
ஒன்றிய அமைச்சரவை, மார்ச் இரண்டாம் வாரம், இந்த அகவிலைப் படி உயர்வுக்கு ஒப்புதல் வழங்கி, மார்ச் இறுதியில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும்.
ஜனவரி மாதம் முதல், மார்ச் மாதம் வரை 3 மாதங்களுக்கு நிலுவைத் தொகையாகவும், ஏப்ரல் மாதம் முதல், ஊதியத்துடனும் இந்த அகவிலைப் படி உயர்வு வழங்கப்படும்.
இது வழக்கமான நடைமுறை என்பதால், தேர்தல் ஆணையம் இந்த அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் வழங்கும்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது?
2024 ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசு ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப் படி உயர்வு, 01.01.2024 முதல் நிலுவைத் தொகையுடன் வழங்கப் படும்.
எனவே ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் இந்த அகவிலைப் படி உயர்வு பற்றிய அறிவிப்பை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்
Post a Comment