அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வு எப்போது?
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 7 வது ஊதியக்குழு பரிந்துரையின் கீழ் ஆண்டுக்கு இரு முறை என மத்திய மற்றும் மாநில அரசுகள் அகவிலைப்படியை உயர்த்தி வருகின்றனர்.அதாவது, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தி வழங்க வேண்டிய இந்த அகவிலைப்படியை மத்திய அரசு கடந்த ஆண்டு மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் உயர்த்தி அறிவித்தது.
இதன் தொடர்ச்சியாக மாநில அரசுகளும் தங்களது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கினார். தற்போது வரை, பெரும்பாலான அரசு ஊழியர்கள் 46% வரை அகவிலைப்படியை பெற்று வருகின்றனர்.
இந்த ஆண்டுக்கான ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வானது, கடந்த மார்ச் மாத அறிவிப்பு போல் இல்லாமல் முன்கூட்டியே அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த அறிவிப்பில் அகவிலைப்படி ஆனது கூடுதலாக 4% அல்லது 5% அதிகரித்து சுமார் 50% அல்லது 51% ஆக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கவும் அதிக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment