Title of the document

School Morning Prayer Activities - பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.11.2023

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.11.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : வாய்மை

குறள் :291

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.

விளக்கம்:

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.

பழமொழி :

Look before you leap

ஆழம் தெரியாமல் காலை விடாதே

இரண்டொழுக்க பண்புகள் :

1) நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தர மாட்டேன்.

2) துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

பொன்மொழி :

நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்!

தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!

- நெப்பொலியன் ஹில்

பொது அறிவு :

1. ஆகாகான் கோப்பை எந்த விளையாட்டுக்கு வழங்கப்படுகிறது?

ஹாக்கி

2. உலகிலேயே வெப்பமான இடம் எது ?

அசீசீயா (லிபியா).

English words & meanings :

quadrilateral - a four sided polygon நாற்கரம். quaff- swallowed hurriedly விநோதமாக

ஆரோக்ய வாழ்வு :

அகத்தி பூ: இதில் 8.4 சதவிகிதம் புரதச்சத்து, 1.4 சதவிகிதம் கொழுப்புச்சத்து, 3.1 சதவிகிதம் தாதுஉப்புகள் மட்டுமல்லாமல் மாவுச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி ஆகிய சத்துகளும் உள்ளன.

நவம்பர் 06 இன்று

போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழலை சுரண்டுவதைத் தடுப்பதற்கான பன்னாட்டு நாள்

நீதிக்கதை

குறுஞ்சி என்ற ஊரில் முனுசாமி என்ற ஒருவன் இருந்தான். அவன் ஒரு முறை தேவையில்லாமல் ஒரு கிராமவாசி மீது பழி சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டினான். பஞ்சாயத்திலும் கிராமவாசிக்குத் தண்டனை கிடைத்தது. பின், வீட்டிற்கு வந்த முனுசாமியின் மனசாட்சி அவனை உறுத்தியது. கிராமவாசி மீது தான் பழி சொன்னதை எண்ணி வருந்தினான். எனவே, தன் பாவத்திற்கு ஏதாவது பிராயச்சித்தம் உண்டா என்று தேடினான். என்ன பிராயச்சித்தம் செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. எனவே, அந்த ஊரிலிருந்த ஒரு துறவியிடம் சென்றான். "துறவியாரே! நான் இந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் மீது வீண் பழி சொல்லிவிட்டேன். அது என் மனத்தை உறுத்துகிறது. அந்தப் பழி சொன்ன பாவத்தில் இருந்து தப்பிக்க எனக்கு வழி கூறுங்கள்!" என்று கேட்டான். துறவி சிறிது யோசித்துவிட்டு, "இன்று இரவு ஐந்து கிலோ இலவம்பஞ்சை எடுத்துப் போய் அந்த கிராமவாசியின் வீட்டுக்கு முன்பு பரப்பிப் போட்டுவிட்டு வந்து விடு. நாளை வந்து என்னைப் பார்," என்று கூறினார். முனுசாமி பஞ்சைக் கொண்டு சென்று கிராமவாசியின் வீட்டின் முன் பரப்பி விட்டான். பின் மறுநாள் சென்று துறவியைப் பார்த்தான். "துறவியாரே! என் பாவம் போய் இருக்குமா இந்நேரம்?" என்று கேட்டான். உடனே துறவி, "முனுசாமி! நீ இப்போது அந்த கிராமவாசியின் வீட்டிற்குச் செல். அவன் வீட்டு முன் நீ நேற்றிரவு பரப்பி வைத்த பஞ்சை மீண்டும் பொறுக்கிக்கொண்டு வா," என்று கூறினார். முனுசாமி மிகுந்த ஆவலுடன் ஓடினான். ஆனால், ஒரு விரல் அளவு பஞ்சு கூட அங்கு இல்லை. எல்லாம் காற்றில் பறந்துபோய் விட்டிருந்தது. அதனைக் கண்ட முனுசாமி திடுக்கிட்டான். மீண்டும் துறவியிடம் ஓடி வந்தான். "துறவியாரே! நேற்றிரவு நான் கிராமவாசி வீட்டின் முன்னால் போட்டுவிட்டு வந்த பஞ்சில் ஒரு துளிப் பஞ்சாவது இப்போது அங்கு இல்லை. என்ன செய்வது?" என்று கேட்டான். துறவி சிரித்துவிட்டு, "முனுசாமி! நீ விரித்துப் போட்டுவிட்டு வந்த பஞ்சை இப்போது மீண்டும் எப்படி அள்ள முடியாதோ, அதே போல, நீ ஒருவர் மீது கூறிய பழியையும் அதனால் உனக்கு ஏற்பட்ட பாவத்தையும் மாற்ற முடியாது. திருப்பி வார முடியாத பஞ்சைப் போன்றது தான் உன் பழிச் சொற்களும். அவற்றையும் இனித் திருப்பி வார முடியாது. இறைவனிடம் உன் தவறுக்காக மன்னிப்பு கேள்,” என்று கூறினார். முனுசாமிக்கு உண்மை புரிந்தது. அன்று முதல் மற்றவர்கள் மீது பழி சொல்லும் குணத்தையே விட்டுவிட்டான். பிறர் மீது வீண் பழி சுமத்துவதால் பலன்

ஏதும் கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்தான் முனுசாமி.

இன்றைய செய்திகள் - 06.11.2023

*நுரையீரலில் இருந்த ஊசியை புது வழியில் அகற்றி எய்ம்ஸ் மருத்துவர்கள் சாதனை.

*டெல்லியில் தொடரும் காற்று மாசு: உலக சுகாதார அமைப்பின் வரம்பை விட 100 மடங்கு அதிகரிப்பு. காற்று மாசு காரணமாக வரும் 10ஆம் தேதி வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை.

*கோவை நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல்.

* பிறந்தநாள் அன்று சச்சின் சாதனையை சமன் செய்த விராத் கோலி.

*விரைவில் எனது 50வது சாதனையையும் முறியடிப்பீர்கள் விராட் கோலியை பாராட்டிய சச்சின்.

* உலக கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Today's Headlines

* AIIMS doctors achieved a new way of removing needles from the lungs.


*Air pollution continues in Delhi: 100 times more than the World Health Organization limit. Holiday for primary schools till 10th due to air pollution.

*Meteorological Center informs that there may be heavy rain in Coimbatore and Nilgiris.

* Virat Kohli equalked Sachin's record on his birthday.

*You will break my 50th record also soon, Sachin praises Virat Kohli.

* Cricket World Cup: Team India vs South Africa 243 India won by a huge margin of runs.

Prepared by
Covai women ICT_போதிமரம்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post