Title of the document

13.11.2023 திங்கள்கிழமை - தீபாவளிக்கு பொதுவிடுமுறை அறிவிக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை !!

தமிழ்நாடு பட்டதாரி - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் TAMILNADU GRADUATE - POST GRADUATE TEACHERS' ASSOCIATION

பதிவு எண் : 46/1971, 17/1975 மற்றும் 287/2023 (தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்றது)

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வணக்கம்!

பொருள்: தீபாவளி திருநாள் - கொண்டாட்டம் - கூடுதலாக விடுமுறை வேண்டுதல்- சார்பாக.

மேற்காண் பொருளில் கோரப்பட்டுள்ளதற்கு ஏற்ப இந்த ஆண்டிற்கான தீபாவளி திருநாள் எதிர்வரும் 12.11.2023 (ஞாயிறு) அன்று வருகின்றது. தீபாவளி திருநாள் கொண்டாட்டத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் இடப்பெயர்வடைவார்கள். ஆதலால் 13.11.2023 (திங்கள்) அன்று ஆசிரியர்கள் தத்தம் பணியிடங்களுக்கு மீண்டும் சென்று சேர்ந்திட இயலாத நிலை உருவாகும். எனவே 13.11.2022 (திங்கள்) அன்று தமிழ்நாடு அரசு பொது விடுமுறை | ஈடு செய்யும் விடுமுறை நாளாக அறிவித்து, மற்றொரு நாளை வேலை நாளாக அறிவித்து உதவிடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post