ஒத்திவைக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு கருத்துக் கேட்பு கூட்டம் 08.11.2023 அன்று நடைபெறுகிறது!
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். சென்னை-600 006, ந.க.எண்.35372/இ12022. நாள்.0111.2023
பொருள்:
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பான ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்து குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது - இக்கோரிக்கை சார்பாக 08.11.2023 அன்று பிற்பகல் 04.00 மணியளவில் கருத்து கேட்பு கூட்டம் நடத்துதல்-சார்ந்து
பார்வை :
1. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 0101.2023 நாளிட்ட செய்தி வெளியீடு.
2 தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் கடிதம் ந.க.எண்.35372/இ12022. நாள்.23.01.2023,
3. அரசாணை (நிலை) எண்: 25 பள்ளிக் கல்வி (தொ.க.3(1) துறை birdir.30.01.2023.
4. அரசுக் கடித எண்.730/தொ.க.3(1)/2023-3, நாள் 01062023 5
. அரசுக்கடித எண்.730/தொ.க.3(1)/2023-5, நாள்.18.10.2023-
6. சென்னை-600 006 தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். நக.எண்.35372/இ1/2022, நாள்:26:10.2023
7. அரசுக் கடித எண்.730/தொ.க.3(1)/2023-6, நாள்.30.10.2023
தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 01.06.2009-க்கு பின் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்கள் 01.06.2009-க்கு முன் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்களுக்கு இணையான ஊதியம் கோரும் கோரிக்கை சார்பாக ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க குழு அமைத்து பார்வை 3-ல் கண்டுள்ளவாறு அரசாணை வெளியிடப்பட்டது.
பார்வை 3-ல் காணும் அரசாணையின்படி சம வேலைக்கு சம ஊதியம் குறித்த கோரிக்கை சார்பாக மேற்கண்டுள்ள குழுவின் தலைவரான அரசு நிதித் துறை செயலாளர் (செலவினம்) அவர்கள் தலைமையில் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் முன்னிலையில் பார்வை 6-ல் காணும் அரசுக் கடிதத்தின்படி 08.11.2023 அன்று பிற்பகல் 04.00 மணியளவில் கீழ்காணும் அட்டவணையின்படி நடைபெறவுள்ள கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஐந்து சங்க பிரதிநிதிகள் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள். மேலும் இக்கூட்டத்திற்கு ஒரு சங்கத்திற்கு இரண்டு பிரதிநிதிகளுக்கு மிகாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அழைக்கப்படும் ஆசிரியர் சங்கங்கள் விவரம் :
- தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
- தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம்
- தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
- தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம்
நாள் மற்றும் நேரம் :
08:11.2023 பிற்பகல் 04.00 மணி
இடம் :
பள்ளிக் கல்வித் துறை கூட்டரங்கு. 6-வது தளம், நாமக்கல் கவிஞர் மாளிகை. தலைமைச் செயலகம், சென்னை
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment