Title of the document

School Morning Prayer Activities - பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.10.2023

School Morning Prayer Activities - பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.10.2023

School Morning Prayer Activities - பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.10.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கள்ளாமை

குறள் :284

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்

வீயா விழுமம் தரும்.

விளக்கம்:

அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.

பழமொழி :

Every ass loves his bray

காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு.

இரண்டொழுக்க பண்புகள் :

1. அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்ல நாம் ஆழ்ந்து சிந்திக்க நம்மை தூண்டும்.

2. எனவே தேவையில்லாத பேச்சை குறைத்து அமைதி காக்க முயல்வேன்.

பொன்மொழி :

ஒன்று சேர்ந்தால், நாம் வாழ்வோம்; பிரிந்தால், வீழ்ந்து விடுவோம்.

பொது அறிவு :

1. நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன்–

சுறாமீன்.

2. நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் நாடு -

ஜப்பான்

English words & meanings :

kempt(adj)- கெம்ப்ட்- clean தூய்மையான. kudos(n)-குடூஸ்- praise பாராட்டு

ஆரோக்ய வாழ்வு :

முருங்கைப் பூ: முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.


நீதிக்கதை

ஓர் ஊரில் ஒருவன் நன்கு வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தான். அப்போது அந்த ஊரில் புதையல் இருக்கும் இடத்தைப் பற்றிய வதந்தி பரவிக் கொண்டிருந்தது. ஆகவே அந்த ஊரில் உள்ளவர்கள், பாலைவனத்தில் நின்று தூரத்தில் இருக்கும் மலையைப் பார்த்து நிற்கும் போது, நமது நிழல் விழும் இடத்தில் புதையல் இருப்பதாக பேசிக் கொண்டனர். இதனைக் கேட்ட அவன், உடனே வியாபாரத்தை விட்டு, புதையலைத் தேட பாலைவனத்திற்கு மறுநாள் காலையிலேயே சென்றான்.. தூரத்தில் இருக்கும் மலையைப் பார்த்து நின்று, அவன் நிழல் விழும் இடத்தில் குழியைத் தோண்ட ஆரம்பித்தான். அதுவரை வியாபாரத்தின் மீது முழுக் கவனம் செலுத்திய அவன் புதையல் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தான். புதையலை பெறுவதற்காக காலையில் இருந்து நிழல் விழுந்த இடத்தில் தோண்டிக் கொண்டு இருந்தவனது நிழல், மாலையில் காலடிக்குள் வந்து விட்டது. அதனால் ஏமாற்றம் அடைந்த அவன் அழுது புலம்பிக் கொண்டு இருந்தான். அப்போது அந்த வழியாக வந்த துறவி ஒருவர், அவனது செயலைக் கண்டு சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்தார். பின் அவனிடம் உன்னிடம்," இருப்பதை கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதை விட்டு. இல்லாத ஒன்றிற்கு ஆசைப்பட்டால் துயரம் தான்" ஏற்படும் என்றார். ஆம்... பொருளாதாரம் மட்டுமே ஒரு மனிதனின் வாழ்வை நிறைவு செய்யாது. குடிசையில் வாழ்ந்து கூழைக் குடிப்பவர்கள் மகிழ்வுடன் வாழ்கிறார்கள். அவர்கள் பொருளாதார நிறைவைப் பொருட்படுத்தாது மனநிறைவோடு வாழ்கிறார்கள். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்ந்தால் அதுவே வாழ்வுக்கு சுகம் தரும் திறவுகோல்.




இன்றைய செய்திகள் - 26.10.2023

*இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழா வரும் 27ஆம் தேதி நடக்கிறது. குடியரசு தலைவரின் சென்னை வருகையில் எந்த மாற்றமும் இல்லை- டிஜிபி அலுவலகம்
*இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவருக்கும் அமெரிக்காவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான உயர்ந்த விருதான தேசிய பதக்கம் கிடைத்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழங்கினார்.
* தமிழகத்தில் வலுப்பெறும் வடகிழக்கு பருவமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்.
*என்சிஇஆர்டி - இன் கீழ் தயாரிக்கப்படும் புத்தகங்களில் இனி "இந்தியா" என்ற வார்த்தைக்கு பதிலாக "பாரத்" என்ற வார்த்தையே இடம் பெறும்.

*ஆப்கானிஸ்தானிடம் தோல்வி எதிரொலி கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாமை நீக்க வலியுறுத்தல்.


Today's Headlines

*The 8th Convocation of Indian Maritime University will be held on 27th. No change in President's visit to Chennai - DGP office

*Two people of Indian origin have received the National Medal of Science and Technology, America's highest award. Presented by US President Joe Biden.

* Northeast Monsoon strengthening in Tamil Nadu - Chennai Meteorological Centre.

* In the books produced under NCERT, the word "India" will now be replaced by the word "Bharat".

*Defeat echoes in Afghanistan, calls for removal of Babar Azam from captaincy.

Prepared by

Covai women ICT_போதிமரம்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

Post a Comment

Previous Post Next Post