Title of the document
School Morning Prayer Activities - பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.09.2023




திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : தவம்

குறள் :263

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்

மற்றை யவர்கள் தவம்.

விளக்கம்:

துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள்

பழமொழி :

The proof of the pudding is in the eating

அப்பம் வெந்தது பிட்டுப் பார்த்தால் தெரியும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. எனது நோட்டில் உள்ள காகிதம் அல்லது பேப்பர் கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.

பொன்மொழி :

தீண்டாமை ஓழிய வேண்டுமானால் சாதி ஓழிய வேண்டும். மதம், மனிதனை மிருகமாக்கும், சாதி மனிதனைச் சாக்கடையாக்கும். தந்தை பெரியார்

பொது அறிவு :

1.உலகிலேயே மிகப்பெரிய நன்னீர் ஏரி எது?

விடை: சுப்பீரியர் ஏரி

2. உலகிலேயே மிகச்சிறிய தீவாக உள்ள நாடு எது?

விடை: நவுரு தீவு

English words & meanings :

panegyric -புகழுரை: disasters - பேரழிவு

ஆரோக்ய வாழ்வு :

கொண்டைக்கடலை: இறைச்சிக்கு ஒரு அருமையான மாற்றாக கொண்டைக் கடலை உள்ளது. ஒரு கப் கொண்டைக் கடலையானது வயது வந்தவர்களின் புரத தேவையில் மூன்றில் ஒரு பங்கை அளிக்கும் திறனை கொண்டுள்ளது.

நீதிக்கதை

ஓர் ஊரில் நல்லரசன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் பெயருக்கு தகுந்தார் போல் நற்குணங்கள் பெற்றவனாக இருந்தான். ஏழை எளியவர்களிடம் அன்பு காட்டும் குணமும் மற்றவர்களுக்கு உதவும் உயர்ந்த மனப்பான்மையும் அவனிடம் இருந்தன. அந்த ஊரில் வசதியாக வாழ்ந்து வந்த சிலர் நல்லரசனின் செல்வாக்கு கண்டு அவர் மீது பொறாமை கொண்டனர்.

அவர் புகழை கெடுப்பதற்கு தங்களால் முயன்ற முயற்சிகளை எல்லாம் செய்தார்கள். ஆனால், அவர்களுடைய முயற்சிகள் யாவும் தோல்வியிலே முடிந்தன. பணக்காரர்கள் ஆகிய தங்கவேலும், கருப்பு சாமியும் இதனால் மனம் புழுங்கினர்.ஏதேனும் ஒரு செயல் செய்து நல்லரசனை அவமானப்படுத்த வேண்டும் என்று துடியாய் துடித்தனர். அந்த பணக்காரர்களுக்கு நல்லரசன் எந்த தீங்குமே செய்யவில்லை. ஆனால், கோயில் திருவிழாவாக இருந்தாலும், வேறு பொது செயல்களாக இருந்தாலும் அந்த நல்லரசனுக்கே அனைவரும் முதல் மரியாதை கொடுத்தார்கள். இதைத்தான் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எப்படியாவது அந்த நல்லரசனை பழிவாங்க வேண்டும் என்று கங்கணம் கட்டி அவர்கள் அந்த ஊரில் வசித்து வந்தனர். முனியாண்டி என்பவனை அழைத்து பேசினார்கள். அந்த முனியாண்டிக்கு ஊர் மக்களிடம் நல்ல பெயர் இருந்தது. அவனை பகடைக்காயாய் பயன்படுத்தி அந்த நல்லரசனை வீழ்த்தி விடலாம் என்று அவர்கள் எண்ணினார்கள்அவனுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும். அதற்கு தான் உன்னுடைய உதவி தேவை என்றனர். மேலும் அவர்கள் தங்களுடைய சதி திட்டத்தை அவனிடம் விளக்கி கூறினார்கள். “எங்களுடைய மூன்று லட்சம் ரூபாய் பணத்தை எப்படியாவது அந்த நல்லரசனின் வீட்டில் நீ வைக்க வேண்டும். போலீஸிடம் புகார்

கொடுத்து அவனை கைது செய்கிறோம். அவன் மூன்று லட்சம் ரூபாயை திருடியதற்கு நீ பொய் சாட்சி சொன்னால் போதும். மற்ற விஷயங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று தங்கவேலும் கருப்புசாமியும் முனியாண்டியிடம் கூறினார்கள்.

முனியாண்டி அவர்களை பார்த்து நீங்கள் சொல்வது போலவே செய்கிறேன் என்று கூறிவிட்டான். தங்கவேலும் கருப்புசாமியும் இதை கேட்டு மகிழ்ந்தார்கள். இந்த சதி திட்டம் அவர்களின் எண்ணம் போலவே நடந்தது. தங்கள் பணம் மூன்று லட்சம் திருடு போய்விட்டதாக அந்த இருவரும் போலீசாரிம் புகார் கொடுத்தார்கள்.இந்த சதி திட்டம் அவர்களின் எண்ணம் போலவே நடந்தது.

உங்களுக்கு யார் மீது சந்தேகம் இருக்கிறதா என்று அவர்கள் கேட்டதற்கு உடனே முனியாண்டியை அழைத்து போய் காவல் நிலையத்தில் அந்த இருவரும் ஒப்படைத்தனர். அவன் காவல்துறை அதிகாரியிடம், “இந்த ஊரில் நல்லரசன் என்று ஒருவன் இருக்கிறான்.நேற்று இரவு இவர்களுடைய வீட்டில் இருந்து பணத்தை திருடி கொண்டு வேகமாக போனது என் கண்களாலே பார்த்தேன். நீங்கள் அவனை விசாரித்தால் எல்லாம் உண்மைகளும் தெரிந்து விடும்” என்று அவன் கூசாமல் பொய் சாட்சி சொன்னான்.அவர்கள் நல்லரசனை பார்த்து, “இந்த பணம் உங்கள் வீட்டில் எப்படி வந்தது?” என்று கேட்டார்கள். நல்லரசன் நிதானத்தை இழக்காமல், “சார், இந்த பணம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது எப்படி இங்கே வந்தது என்பதும் எனக்கு தெரியாது. இதுல ஏதோ சதி திட்டம் இருக்கிறது.அந்த முனியாண்டியை நீங்கள் கண்காணித்தால் உங்களுக்கு விஷயம் தெரிந்து விடும். உங்களோடு விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறேன்” என்றான். ஊர் மக்களின் நன்மதிப்புக்குரியவன் வல்லரசன் என்பதால் அவனுக்கு மதிப்பு கொடுத்து காவல் அதிகாரிகள் முனியாண்டியின் வீட்டுக்கு சென்று சோதனை இட்டனர்.

அவன் வீட்டிலிருந்து சில ரூபாய் கட்டுகளை காவல்துறையினர் கைப்பற்றினார்கள். அந்த கட்டுகளை சோதித்ததில் அவை அனைத்துமே கள்ள நோட்டுகள் என்பது தெரிந்தது. முனியாண்டி சிறையில் அடைக்கப்பட்டான். கள்ள நோட்டு வழக்கில் அவன் பெயரை சேர்த்தார்கள். அதை அறிந்த முனியாண்டி, காவல் அதிகாரியை பார்த்து, “சார், எனக்கு அது போல் புத்தி எல்லாம் கிடையாது. பணத்துக்கு ஆசைப்பட்டு உத்தமரான நல்லரசனுக்கு எதிராக பொய் சாட்சி கூறினேன்.

அதுக்கு கடவுள் எனக்கு சரியான தண்டனை கொடுத்துவிட்டார். தங்கவேலும், கருப்புசாமியும் இருவரும் தான் என்னை இவ்வாறு செய்ய சொன்னார்கள். மற்றபடி கள்ள நோட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது” என்று எல்லா உண்மையும் கூறிவிட்டான்.உடனே காவல்துறை அதிகாரிகள் தங்கவேலு மற்றும் கருப்பசாமியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிகழ்ச்சியின் மூலம் நல்லரசன் மீது மக்களுக்கு இருந்த நன்மதிப்பு மேலும் கூடியது.

நீதி : யார் மீதும் எப்பொழுதும் பொய்சாட்சி சொல்ல கூடாது. அது ஒரு நாள் வெளிப்பட்டு பொய் சாட்சி கூறியவரையே தண்டனைக்கு உட்படுத்தி விடும். எனவே, அனைவரும் மனசாட்சிக்கு உட்பட்டு நல்லவர்களாக வாழ வேண்டு்ம்.

இன்றைய செய்திகள் - 20.09.2023

*பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை: மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். - மு க ஸ்டாலின் உத்தரவு.

*2024 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு மே மாதம் 5ஆம் தேதி நடத்தப்படும்.

ஜே. இ. இ. முதல் தேர்வு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெறும். ஜே. இ. இ. 2 ஆம் தேர்வு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

*பழைய பாராளுமன்ற கட்டிடத்தை 'சம்விதன் சதன்' என அழைக்க வேண்டும்- பிரதமர் மோடி பரிந்துரை.

*மக்களவையில் 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்.

*ஐசிசி ஒரு நாள் தரவரிசை மீண்டும் முதலிடம் பிடித்தது பாகிஸ்தான்.

* ஆசிய விளையாட்டு கைப்பந்து: இந்தியா- கம்போடியா இடையிலான வாலிபால் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

Today's Headlines

*Monsoon rain precautions in advance - discussions : Rainwater drainage works should be completed quickly. -

CM M.K.Stalin's order.

*The NEET exam for 2024 will be held on 5th May. J.E.E The first exam will be held from 24th January to 1st February.

J.E.E 2nd exam will be starting from April 1St and ends on 15th.

* Old Parliament building should be called 'Samvithan Sadan' - PM Modi suggests.

* 33% reservation bill for women was passed today .

*Pakistan regain top spot in ICC ODI rankings

* Asian cup Volleyball: India beat Cambodia.

Prepared by
Covai women ICT_போதிமரம்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post