Title of the document

40 வயது முதல் மாதம் ரூ.20 ஆயிரம் பென்ஷன் வழங்கும் LIC திட்டம் – முழு விவரம் இதோ! 


மக்கள் தங்களுடைய முதுமை காலத்தில் நிதி நெருக்கடி இல்லாமல் இருக்க LIC சாரல் பென்ஷன் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுத்தி இருக்கிறது.

பென்ஷன் திட்டம்

இந்திய லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் எல்ஐசி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பாலிசி திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் மக்கள் தங்களுடைய முதுமை காலத்தில் நிதி நெருக்கடி இல்லாமல் இருக்க எல்ஐசி சாரல் பென்ஷன் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் ஒரு பிரீமியம் திட்டம் ஆகும்.

இந்த திட்டத்தில் ஒரு முறை பிரீமியம் செலுத்தினால் 40 வயது முதல் மாதம் ரூ.20 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் சேர குறைந்தபட்ச வயது 40 ஆண்டுகள் ஆகும். அதிகபட்ச வயது 80 ஆண்டுகள் ஆகும். பாலிசியில் செலுத்திய பிரீமியத்தின் முதல் ஆண்டிலிருந்து வருடாந்திரம் அதாவது ஓய்வூதியம் கிடைக்கும்.

இந்த திட்டத்தில் மாதம் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் பெற பிரீமியம் செலுத்த வேண்டும். அதிகபட்ச வருடாந்திரத்திற்கு வரம்பு இல்லை. இந்த திட்டத்தில் பாலிசிதாரரின் மரணத்திற்குப் பிறகு மனைவிக்கும் ஓய்வூதியம் கிடைக்கும் வகையில் சிறப்பம்சமும் இருக்கிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post