Title of the document

Local Holiday - 03.08.2023 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !

1. நாமக்கல் மாவட்டம் 03.08.2023 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !
2. தருமபுரி மாவட்டம் 03.08.2023 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !
3. சேலம் மாவட்டம் 03.08.2023 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !


1. நாமக்கல் மாவட்டம் 03.08.2023 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !

நாமக்கல் மாவட்டம் , கொல்லிமலைப் பகுதியில் சங்க காலத்தில் புகழ்பெற்ற கடைஏழு வள்ளல்களில் ஒருவராகத் திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தினையும் , கொடைத்தன்மையினையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் அரசு சார்பில் வல்வில் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி , நடப்பு ஆண்டில் எதிர்வரும் 2.8.2023 மற்றும் 3.8.2023 ஆகிய நாட்களில் அரசின் சார்பாக வல்வில் ஓரி விழா கொண்டாடப்படவுள்ளது.

📌Local Holiday - 31.07.2023 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - Click Here !

📌Local Holiday - 03.08.2023 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு (3 மாவட்டங்கள்) - Click Here !

📌Local Holiday - 05.08.2023 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - Click Here !


இவ்விழாவிற்காக நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் , பள்ளி , கல்லூரிகளில் பயிலும் மாணவ , மாணவியர்கள் , அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை பணியாளர்கள் ஆகியோர் குடும்பத்துடன் கொல்லிமலைப் பகுதிக்கு வருகை புரிந்து சிறப்பிக்க உள்ளதால் , எதிர்வரும் , 
03.08.2023 ( ஆடி மாதம் 18 - ஆம் நாள் ) வியாழக்கிழமை அன்று நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும் , இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் 12.08.2023 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.


2. தருமபுரி மாவட்டம் 03.08.2023 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !



உள்ளூர் விடுமுறை - தருமபுரி மாவட்டம் ஆடி 18 ஆம் நாளான 03/08/2023ஆம் தேதியன்று தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்தல் தொடர்பாக.

ஆண்டுதோறும் நடைபெறும் உள்ளூர் திருவிழாக்கள்/சிறப்பு நிகழ்வுகளுக்கு அரசால் நாளதுவரை அனுமதிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறை நாட்கள் அனைத்தும் உள்ளடக்கிய திருத்திய உள்ளூர் விடுமுறைப் பட்டியல் மேற்காண் பார்வை (1) இல் காண் அரசாணை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வை (2) இல் காண் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் சுற்றறிக்கையில், ஆடி 18 ஆம் நாளான 03.08.2023ஆம் தேதியன்று தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே
03.08.2023 (வியாழக்கிழமை) அன்று அனைத்து அரசு/ அரசு உதவி பெறும் அந்நாளை ஈடுகட்டும் வகையில் 26.08.2023 (சனிக்கிழமை) அன்று அனைத்து பள்ளிகளும் வேலை நாளாக செயல்படும்
என அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.


3.சேலம் மாவட்டம் 03.08.2023 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !

 சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செயல்முறைகள் முன்னிலை : திரு.செ.கார்மேகம், இ.ஆ.ப


பொருள் உள்ளூர் விடுமுறை - சேலம் மாவட்டம் - சங்ககிரி வட்டம் – சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளான தமிழ் மாதம் ஆடி 18 ஆம் நாளை முன்னிட்டும் மற்றும் ஆடி 18 விழாவினை முன்னிட்டும், ஆடிப்பெருக்கு 03.08.2023 (வியாழக்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை அறித்து உத்தரவிடுதல் - தொடர்பாக.

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், சுதந்திர போராட்ட வீரர், தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளான தமிழ்மாதம் ஆடி 18-ஆம் நாளை முன்னிட்டும் மற்றும் ஆடி 18 ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டும் தமிழ்மாதம் ஆடி, 18-ஆம் நாள் 03.08.2023 (வியாழக்கிழமை) உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

மேற்படி, உள்ளூர் விடுமுறை, செலாவணி முறிச்சட்டம் 1881 (Negotiable Instrument Act 1881)-ன் கீழ் வராது என்பதால், அரசுப்பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள, மாவட்ட மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் 19.08.2023 ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஈடுகட்டும் பணிநாளாகும் என உத்தரவிடப்படுகிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post