Title of the document

School Morning Prayer Activities - 19.06.2023

School Morning Prayer Activities

School Morning Prayer Activities
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 19.06.23

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: பயனில சொல்லாமை
குறள் : 196


பயனில்சொல் பாராட்டுவானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.


விளக்கம்:


பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.


பழமொழி :
A contented mind is a continual foot


போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
இரண்டொழுக்க பண்புகள் :


1. அனைவரிடமும் அன்பாக இருப்பேன்.


2. அனைவரையும் மதித்து நடப்பேன்.
பொன்மொழி :


ஒரு தேசத்தின் முதன்மையான நம்பிக்கை அதன் இளைஞர்களின் சரியான கல்வியில் உள்ளது. டிசிடெரியஸ் எராஸ்மஸ்
பொது அறிவு :


1.உலகின் மிகப்பெரிய மலைக்காடு எது?


அமேசான்.


2. முதல் செய்தித்தாள் தொடங்கிய நாடு எது?


சீனா
English words & meanings :


wrath - anger, கோபம். wiles - tricks,தந்திரங்கள்
ஆரோக்ய வாழ்வு :


நாம் உட்கொள்ளும் உணவில் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். பயிர் வகைகள் சாப்பிடுவது நல்லது அதிலும் ஊறவைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
ஜூன் 19 இன்னறு


ஆங் சான் சூச்சி அவர்களின் பிறந்தநாள்


ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi, பிறப்பு: சூன் 19, 1945) என்பவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் மக்களாட்சி ஆதரவாளரும் ஆவார். இவர் மியான்மரின் அரச ஆலோசகராக பதவி வகிக்கிறார். இவர் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு என்ற கட்சியின் தலைவராக உள்ளார். தன் நாட்டில் மக்களாட்சியை ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார். 1991 இல் அமைதிக்கான நோபல் பரிசினை ஆங்சான் சூச்சி பெற்றார்.
நீதிக்கதை


ஆற்றின் கரையில், ஒருவன் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தான். அதுவே அவனுடைய தொழில், அவனுடைய முதுகு சிறிது வளைந்து இருந்தது.


அந்தப் பக்கமாகச் செல்லும் சிறுவர்கள், அவனைக் கூனன் என்று சொல்லி, கேலி செய்வார்கள். அதற்காக அவன் வருத்தப்படவில்லை. சிறுவர்களின் பேச்சைக் காதில் வாங்காமல், தன் காரியத்திலேயே கண்ணாக இருந்தான்.


ஒரு நாள் சிறுவர்கள் சிலர் கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன், ஆற்றில் குளித்தான். சிறிது தூரத்தில் இருந்த சூழலில் அவன் சிக்கிக் கொண்டு தவித்தான். அவனுக்கு நீச்சல் தெரியாது. மற்ற சிறுவர்களுக்கும் நீச்சல் தெரியாது. எதுவும் செய்ய முடியாமல் கூச்சலிட்டனர்.


அவர்கள் போட்ட கூச்சலைக் கேட்ட கூனன், வேகமாக ஓடி


ஆற்றில் குதித்து, மூழ்கிக் கொண்டிருந்த சிறுவனைப் பிடித்து இழுத்துக் கரைக்குக் கொண்டு வந்தான். சிறுவன் குடித்திருந்த நீரை வெளியேற்றினான். அவன் உயிர்


பிழைத்துக் கொண்டான்.


சிறுவர்கள் கூனனிடம் நன்றி கூறி, தங்களை மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டனர். அது முதல் கூனன் என்று கேலி செய்வது இல்லை.
எவரையும் கேலியாகப் பேசக் கூடாது.
இன்றைய செய்திகள் - 19.06. 2023


* தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க 20 கோடி
மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்.


* சர்வதேச தந்தையர் தினமான இன்று, சூரத்தில் டீ மற்றும் சிற்றுண்டி வியாபாரம் செய்து வரும் தந்தை, தனது 3 பெண் குழந்தைகளை தேசிய அளவிலான மல்யுத்த வீராங்கனையாக உருவாக்கி உள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


* தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியினால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.


* இந்தோனேஷியா ஓபன் பேட்மிடன் போட்டியின் இறுதிச் சுற்றில் மலேசியா அணியை இந்திய அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது.


*யோகாவை அன்றாட வாழ்வில் அங்கமாக மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி.


Today's Headlines


* To prevent traffic congestion in Pattukottai, Thanjavur district 20 crores worth New bus station is designed.


* On International Father's Day , a father who runs a tea and snack business in Surat, has made his 3 daughters into national level wrestlers, spreading happiness.


* Due to the prevailing upper circulation in South-West Bay of Bengal, there will be thunderstorms in many places in Tamil Nadu, Puducherry and Karaikal.


*In the final round of the Indonesia Open Badminton Tournament, the Indian team defeated the Malaysian team and won the champion title.


* People should make yoga a part of their daily life - PM Modi.
Prepared by


Covai women ICT_போதிமரம்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post