TNPSC Today Latest News | டிஎன்பிஸ்சி இன்று வெளியிட்டுள்ள முக்கிய செய்திக் குறிப்பு !
TNPSC Today Latest News in Tamil
TNPSC Today Latest News in Tamil | டிஎன்பிஸ்சி இன்றைய செய்திTNPSC Today Latest News in Tamil |
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்றைய வெளியிட்ட செய்திக்குறிப்பு !
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-1 2020 (தொகுதி-I Group-I Services) இல் அடங்கிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் 08.05.2023 முதல் 16.05.2023 (அரசு வேலை நாட்களில்) மாலை 5.45 மணிக்கு முன்னர் தங்களது மூலச் சான்றிதழ்களை (Original Certificates) ஸ்கேன் (Scan) செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ.சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் முதனிலை எழுத்துத் தேர்விற்கு தேர்வு கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள் அனைவரும் முதன்மைத் தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.200/- (ரூபாய் இருநூறு மட்டும்) செலுத்த வேண்டும். அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய கால அவகாசம் சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே முடிவடைவதால் விண்ணப்பதாரர்கள் 15.05.2023 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்திய பின்னரே அவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விண்ணப்பதாரர்கள், சான்றிதழ்களை மேற்குறிப்பிட்ட நாளுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவ்விண்ணப்பதாரர்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வில் (Main Written Examination) கலந்து கொள்ள விருப்பமில்லை எனக் கருதி அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது ..
Post a Comment