Title of the document

பன்னிரண்டாம் வகுப்பு துணைத்தேர்வு எப்போது நடைபெறும் ?  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 19-ல் துணைத்தேர்வு நடத்தப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார். தேர்வில் பங்கேற்ற 8.03 லட்சம் பேரில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். சுமார் 47,934 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இந்த மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக உடனடியாக துணை தேர்வு நடத்தப்படுகிறது.


துணை தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் இந்த கல்வியாண்டிலேயே உயர்கல்வியை தொடர முடியும். அதன்படி தமிழ்நாட்டில் பிளஸ் 2 துணைத்தேர்வு ஜூன் 19ம் தேதி துவங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. துணைத்தேர்வு குறித்த முழுமையான அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருக்கிறது. பிளஸ்டூ தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தோல்வியடைந்த மாணவர்கள் மனநல ஆலோசனை பெற 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post