8th Pay Commission : அரசு ஊழியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி !
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு பெரிய, முக்கிய செய்தி கிடைக்கவுள்ளது. சமீபத்தில் ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டது. விரைவில் ஊழியர்களின் ஊதியமும் அதிகரிக்கப்படும். இது குறித்து, இன்னும் அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை, எந்த வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எனினும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அனைத்து மத்திய ஊழியர்களும் 8வது சம்பள கமிஷனை கோரி வருகின்றனர். 8 ஆவது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றம் இருக்கும். இது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.
தற்போது அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் ஏழாவது ஊதியக்குழு மூலம் அகவிலைப்படி மற்றும் பிற ஊதிய கொடுப்பனவுகளை பெறுகிறார்கள். இந்தியாவில் தற்போது அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு அமலில் உள்ளது. எனினும் 8 ஆவது ஊதியக் குழு குறித்த விவாதமும் இப்போது தொடங்கியுள்ளது. அதை விரைவில் அமல்படுத்த வேண்டும் என சமூக வலைதளங்களில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
2024 ஆம் ஆண்டில், இந்தியாவின் பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. தேர்தலுக்குப் பிறகு புதிய ஊதியக் குழுவை அரசு அமைக்கக்கூடும் என்ற பேச்சும் எழுந்துள்ளது. இது வரை அரசு அதிகாரப்பூர்வமாக இது பற்றி எதையும் அறிவிக்கவில்லை. ஆனால் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு புதிய ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், புதிய ஊதியக்குழுவின் கீழ் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
விரைவில் அதற்கான அறிவிப்பை சம்பந்தப்பட்ட அரசு வெளியிடலாம். தேர்தலுக்கு முன் இன்னும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டால், தற்போதைய ஆட்சிக்கு பெரிய பலன் கிடைக்கும். இவற்றின் மூலம் ஊழியர்களின் ஆதரவும் நடப்பு அரசாங்கத்துக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் அடுத்த ஊதியக்குழு குறித்த அறிவிப்பு தற்போது வெளிவருமா இல்லையா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
Post a Comment